நான் பாத்ரூம்ல ஒளிஞ்சுகிட்டேன்.. பாக்க முடியல.. 15 ரன்லதான் வெளிய வந்தேன்.. பாக் முதல் டெஸ்ட் – கேப்டன் பவுமா பேட்டி

0
578

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா வெற்றி பெற்ற நிலையில் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட வருகிற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் அதற்குப் பிறகு முதலில் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 301 ரன்கள் குவிக்க இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

அதற்குப் பிறகு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் தோல்வியடையும் நிலையில் இருந்த அணியை பந்துவீச்சாளர் ரபாடா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். மறுமுனையில் தொடக்க வீரர் மார்க்ரம் 37 ரன்கள் குவிக்க அணியின் கேப்டன் பவுமா 40 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா இக்கட்டான நிலையில் இருந்த போது தான் ரெஸ்ட் ரூமில் ஒளிந்து கொண்டதாக சில கருத்துக்களை தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

போட்டியை பார்க்க முடியாமல் ஒளிந்து கொண்டேன்

இதுகுறித்து பவுமா கூறும் பொழுது “எனக்கு அது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது ஒரு நல்ல விளம்பரம். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒரு த்ரில்லர் ஆட்டத்தில் நாங்கள் நல்ல முடிவை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் யாரிடம் எதுவும் பேசாமல் தென் ஆப்பிரிக்க அணி இறுதி கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நான் கழிவறையில் ஒளிந்து கொண்டேன்.

இதையும் படிங்க:விராட் சொன்ன இந்த வார்த்தைதான்.. என் கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறந்த தருணம் – நித்திஷ் குமார் ரெட்டி பேட்டி

எங்கள் தொடக்க வீரர் மார்க்ரம் அணியின் வீரர்களை சிறப்பாக அந்த தருணத்தில் வழி நடத்தி நேர்மறையாக சூழ்நிலையை வைத்திருக்க முயன்றார். அதை அவர் செய்ததில் இன்னும் தன்னம்பிக்கை அதிகமாக இருந்தது என்று நினைக்கிறேன். இறுதிக்கட்டத்தில் எங்கள் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்படும் போது மட்டுமே வெளியே வந்தேன். அதுவும் நான் பார்க்கும் பகுதிக்கு முழுமையாக வெளிவரவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் போட்டியை பார்ப்பது கடினமான விஷயம் தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -