இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் இக்கட்டான நிலைமையில் இருந்த போது நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி சதம் அடித்து இந்திய அணியை மீட்டார்.
இந்த சூழ்நிலையில் நிதிஷ்குமார் ரெட்டி இந்திய ஜாம்பவான் விராட் கோலி தன்னை பாராட்டிய விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இக்கட்டில் இருந்த இந்திய அணி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் களமிறங்கிய போது முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த சூழ்நிலையில் களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி மிக அபாரமாக விளையாடி 189 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்கள் குவித்து இந்திய அணியை மீட்டார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த போது அதற்கு இந்தியா ஓரளவு பதிலடி கொடுக்கும் விதமாக நிதிஷ்குமார் ரெட்டியின் சிறப்பான சதத்தால் 329 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் சதம் அடித்த நிலையில் விராட் கோலி தன்னை பாராட்டியது சிறப்பான தருணங்களாக அமைந்ததாக நிதீஷ் குமார் ரெட்டி சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலி கூறிய வார்த்தைகள்
இது குறித்து அவர் கூறும் போது “இது மிகவும் சிறப்பானதாக நன்றியுள்ள தருணமாக இருந்தது. நான் சிறுவயதில் இருந்தே விராட் கோலியை பார்த்து அவரை எனது அடையாளமாக நான் மாற்றிக் கொண்டேன். இப்போது நான் வளர்ந்து அவரோடு விளையாடி இருக்கிறேன். மேலும் நான் ஸ்ட்ரைக்கில் நான் இருந்தபோது அவர் சதம் அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய போட்டியில் நான் சதம் அடித்த போது அவர் என்னை மிகவும் பாராட்டினார்.
இதையும் படிங்க:இந்திய அணி ஆபத்துனு கம்மின்ஸ்க்கு தெரிஞ்சிருக்கு.. அதனாலதான் இந்த ரிஸ்க் எடுக்கல – ரவி சாஸ்திரி பேட்டி
நான் சதம் அடித்ததும் அவர் என்னிடம் வந்து நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். சதம் அடித்ததன் மூலமாக இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து உள்ளீர்கள் என்று கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் எப்போதுமே இந்த தருணம் குறித்து கனவு கண்டிருக்கிறேன். விராட் கோலி என்னுடன் பேசியபோது எனக்கு அது மிகவும் சிறந்த தருணமாக அமைந்திருக்கிறது” என்று நிதிஷ்குமார் ரெட்டி கூறி இருக்கிறார்.






