இந்திய கிரிக்கெட்

124 ஜெயிக்கிறதுக்கான ஸ்கோரே கிடையாது.. ஆனா நாங்க வின் பண்ண முக்கிய காரணம் இதுதான் – டெம்பா பவுமா கருத்து

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கிய காரணமாக இருந்த கேப்டன் டெம்பா பவுமா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதை நோக்கி விளையாடிய இந்திய அணி 93 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 15 வருடங்களுக்கு பின்பு தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் அரை சதம் அடித்த ஒரே வீரராக டெம்பா பவுமா இருக்கிறார்.

உற்சாகமாக இருக்கிறது

இந்த போட்டி குறித்து பேசி உள்ள டெம்பா பவுமா கூறும் பொழுது ” இந்த மாதிரி ஒரு போட்டியில் பங்கு பெறுவதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு போட்டியில் பங்கு பெற நீங்கள் விரும்புகிறீர்கள். மேலும் சரியான முடிவின் பக்கமும் இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள். எங்களால் எந்த அளவுக்கு எதிர்த்து நிற்க முடியுமோ அந்த அளவிற்கு நின்றோம் என்று நான் நினைக்கிறேன்”

“இங்கு பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தோம். ஆனால் ஆடுகளத்தில் என்ன கிடைக்குமோ அதை நாம் முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை நாங்கள் மிகவும் அழகாக செய்தோம் என்று நினைக்கிறேன். மேலும் அதிர்ஷ்டமும் எங்கள் பக்கம் இருந்தது”

- Advertisement -

இரண்டு விஷயங்கள் முக்கியம்

“எங்கள் பந்துவீச்சாளர்கள் மீண்டும் எங்களை இந்த போட்டிக்கு அழைத்து வந்தார்கள். அதே சமயத்தில் பேட்டிங்கில் மார்க்கோ மற்றும் கார்பின் போஸ் இருவருடனும் வந்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு உதவியாக இருந்தது. இன்று நாங்கள் காலை ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்று நினைத்து உள்ளே வந்து, அதை முடிந்த வரையில் செய்தோம்”

இதையும் படிங்க : எங்க தோல்விக்கு முக்கிய காரணம் அந்த 2 பேர் செஞ்ச வேலைதான்.. இத பத்தி யோசிக்கவே கூடாது – ரிஷப் பண்ட் பேச்சு

“124 ரன்கள் எடுத்தால் எல்லா நேரமும் வெற்றி பெற்று விட முடியாது. எனவே எங்களால் முடிந்தவரை நாங்கள் போட்டியில் இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தோம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் தன்னம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல் போட்டியில் இருக்க போராடினால் மட்டும்தான் வெற்றி பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by