எங்க தோல்விக்கு முக்கிய காரணம் அந்த 2 பேர் செஞ்ச வேலைதான்.. இத பத்தி யோசிக்கவே கூடாது – ரிஷப் பண்ட் பேச்சு

0
224
Rishabh

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை தங்கள் அணி துரத்தி இருக்க வேண்டும் என தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார்.

தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதை துரத்திய இந்திய அணி 93 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

ஆடுகளம் பற்றிய சர்ச்சை

ஒரு பக்கத்தில் இந்த ஆடுகளம் இப்படி மோசமாக மாறும் என தாங்கள் நினைக்கவில்லை என இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த ஆடுகளத்தை ஆரம்பத்தில் பார்வையிட்ட கேப்டன் கில் அதிருப்தி அடைந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சௌரவ் கங்குலி இந்த ஆடுகளம் இந்திய அணி விரும்பி கேட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சுழல் பந்து வீச்சுக்கு அதிகம் சாதகம் இருக்கும் ஆடுகளத்தை அமைக்க கூடாது என இந்திய முன்னாள் வீரர்கள் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோல்வி ஏன்?

இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும்பொழுது “இது போன்ற ஒரு போட்டி குறித்து நீங்கள் அதிகம் யோசித்துக் கொண்டே இருக்கக் கூடாது. இந்த ஸ்கோரை நாங்கள் துரத்தி வெற்றி பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் மேல் அழுத்தம் உருவானது. அதைக் கடந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெற நாங்கள் தவறி விட்டோம்”

இதையும் படிங்க : வெறும் 30 ரன்.. கேப்டன்சியில் சாதனை படைத்த டெம்பா பவுமா.. இந்திய அணி தோல்வி.. காரணம் என்ன?

“டெம்பா பவுமா மற்றும் கார்பின் போஸ் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் அவர்களை ஆட்டத்துக்குள் மீண்டும் கொண்டு வந்து விட்டது. 120 என்ற இலக்கு கொஞ்சம் இங்கு சிக்கலானதாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இதை துரத்தி வெற்றி பெற்று இருக்க வேண்டும். மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கிறதா என்று கேட்டால் இப்பொழுதுதான் ஆட்டம் முடிந்து இருக்கிறது. அதனால் அது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -