இன்று பெண் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பங்குவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 117 ரன்னில் சுருட்டினார்கள். ஹர்திக் பாண்டியா டி20 வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா மற்றும் அக்சர் படேல் இருவரும் விளையாடவில்லை. இவர்களுடைய இடத்திற்கு ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் களம் இறங்கினார்கள்.
கலக்கிய ஃபாஸ்ட் பவுலர்கள்
இன்றைய போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடைபெறுவதால் குளிரான சூழ்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் மற்றும் சீம் கிடைத்தது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் யாராலும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் குயின்டன் டி காக் 1, ரீசா ஹென்றிக்ஸ் 0, டிவால்ட் பிரிவிஸ் 2, ஸ்டப்ஸ் 9, கார்பின் போஸ் 4, டோனவன் பெரிரா 20, மார்க்கோ யான்சன்2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
ஹர்திக் பாண்டியா சாதனை
இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் எய்டன் மார்க்ரம் மட்டும் தாக்கு பிடித்து விளையாடி 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அர்ஸ்தீப், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க : தெஆ 3வது டி20.. வீடு திரும்பிய இந்திய ஸ்டார் வீரர்.. அதிரடி மாற்றங்கள். வென்று முன்னிலை பெற முடியுமா?
இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100வது விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் இந்த வடிவத்தில் அவர் 1939 ரன்கள் எடுத்திருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து, 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்ற சாதனையை படைத்தார்.






