இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இருக்கிறது. இரு அணிகள் தரப்பிலும் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் தற்போது தற்காலிகமாக சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக மாறி இருக்கிறது.
வீடு திரும்பிய இந்திய வீரர்
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பி இருக்கிறார் என இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார். இவருடைய இடத்திற்கு ஹர்ஷித் ராணா உள்ளே வந்திருக்கிறார்.
மேலும் இந்திய தரப்பில் இன்னொரு மாற்றமாக அக்சர் படேல் நீக்கப்பட்டிருக்கிறார். ஆல் ரவுண்டரான இவருடைய இடத்திற்கு பிரதான ஸ்பின்னர் குல்தீப் யாதவ் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். தற்போது இந்த இந்திய பிளேயிங் லெவனில் பேட்டிங் வரிசை ஏழு வரையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பின்னர்களே கிடையாது
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவனில் பிரதான ஸ்பின்னர்கள் யாரும் இல்லை. கடந்த போட்டியில் விளையாடிய ஜார்ஜ் லின்டே நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு கார்பின் போஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் அன்றிச் நோர்க்கியா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் உள்ளே வந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே மைதானத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக பந்துவீச்சு கொஞ்சம் கடினமாக இருக்கும்.
இதையும் படிங்க : நான் சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்க.. 3வது ஆசஸ் டெஸ்ட் முன் இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம்
இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ்.






