“மார்ச் 5ஆம் தேதி வரை வெயிட் பண்ணுங்க.. ஐபிஎல் இந்திய அணிக்கு செம நியூஸ் காத்திருக்கு” – கங்குலி தகவல்

0
171
Ganguly

பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி அதாவது என்சிஏ வீரர்களின் உடல்தகுதி குறித்து கொடுக்கும் அறிக்கைதான், ஒரு வீரரை இந்திய அணியில் தேர்வு செய்யலாமா கூடாதா என்பதை முடிவு செய்கிறது.

தற்போது இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி முடிவடைகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்த பத்து நாட்களில் இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் தொடங்க இருக்கிறது. இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் இங்கிலாந்து தொடர் முடிந்ததும் அப்படியே தங்களது ஐபிஎல் அணிகளின் பயிற்சி முகாமில் இணைந்து கொள்வார்கள்.

மற்றபடி இந்திய அணிக்கு வெளியே இருக்கும் வீரர்கள் ஏற்கனவே தங்களுடைய பயிற்சியை ஐபிஎல் அணிகள் உடன் இணைந்து ஆரம்பித்து விட்டார்கள். மேலும் வெளிநாட்டு வீரர்களின் வருகையும் ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணியின் டைரக்டருமான சௌரவ் கங்குலி ரிஷப் பண்ட் குறித்த சில முக்கிய விஷயங்களை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அவர் இதுகுறித்து கூறும் பொழுது “ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் எங்களுக்கு திரும்ப கிடைப்பது மிகவும் முக்கியமான விஷயம். அவர் சிறப்பு வாய்ந்த வீரர் என்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முழு தொடரிலும் விளையாடுவார் என்று நம்புகிறோம். அனைத்து வடிவங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படும் உள்நாட்டு வீரர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். ஆனாலும் ரிஷப் பண்ட் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்.

அவர் தற்பொழுது முழு உடல் தகுதியுடன் இருப்பதை முழுவதுமாக நிரூபித்து விட்டார். ஆனால் மார்ச் 5ஆம் தேதி தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு உடல் தகுதி சான்றிதழ் கொடுக்கும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் அவர் கேப்டன்சி செய்வாரா? என்பது குறித்து நமக்கு தெரியும்.

இதையும் படிங்க : ரோகித்-டிராவிட் காட்டிய பெருந்தன்மை.. மதிக்காத இஷான் கிஷான்.. நீக்கம் எப்படி நடந்தது?.. வெளியான தகவல்கள்

ரிஷப் பன்ட் குறித்து நாங்கள் எச்சரிக்கையாகவே அணுகுகிறோம். அவரது விஷயத்தில் அதிகஉற்சாகத்தில் தள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அவர் நீண்ட காலம் விளையாடக்கூடிய இளம் வீரர். மார்ச் ஐந்தாம் தேதி தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கான உடல் தகுதி சான்றிதழைக் கொடுத்து விடும். அதன் பிறகு அவர் அணியுடன் இணைவார். நாங்கள் ஒவ்வொரு போட்டியாக பார்த்து மற்றவற்றை முடிவு செய்வோம்” எனக் கூறியிருக்கிறார்.