இந்த ஐபிஎல் கில்லுக்கு சரியா போகல.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான் – கிரேம் ஸ்மித் பேட்டி

0
15
Gill

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி, சதம் அடித்தது ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அவருடைய பேட்டிங் குறித்து முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் பேசியிருக்கிறார்.

நேற்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்ததோடு, 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரம்மாண்டப்படுத்தினார்கள். இவர்களின் துவக்கம் அந்த அணி வெற்றி பெறுவதற்கு போதுமானதாக அமைந்தது.

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் மூன்று சதங்களுடன் 890 ரன்கள் கில் குவித்து அசத்தி இருந்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்கு திறமைக்கேற்ற அளவுக்கு செல்லவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாமல் கேப்டன் பொறுப்பை ஏற்ற அவருக்கு, பவுலிங் யூனிட்டில் முகமது சாமியும் இல்லாதது பெரிய பிரச்சினையை உண்டாக்கியது.

இந்த நிலையில் நேற்று சதம் அடித்து தன்னுடைய பழைய பேட்டிங் தரத்துக்கு திரும்பியிருக்கிறார். மேலும் ரிசர்வ் வீரராக டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் இடம்பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் ரன்கள் குவிக்காததால் இதுவும் விமர்சனமானது.

- Advertisement -

இந்த நிலையில் கில் பேட்டிங் குறித்து பேசி இருக்கும் கிரேம் ஸ்மித் கூறும் பொழுது “கில்லுக்கு திறமை இருக்கிறது என்பதை நாம் எப்பொழுதுமே அறிந்திருக்கிறோம். அவர் அதை ஆண்டுதோறும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவர்க்கு கொஞ்சம் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன். கேப்டனாக முதல் வருடம் சமாளிக்க வேண்டி இருந்திருக்கிறது. முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பேட்டிங்கை ஓபன் செய்வது என்கின்ற கண்ணோட்டத்தில் அவர் தவற விட்டிருக்கலாம்.

இதையும் படிங்க : நேற்று ஆட்டநாயகன் விருது கில்லுக்கு கொடுத்திருக்கக் கூடாது – இர்பான் பதான் ஹர்பஜன் சிங் மாற்றுக்கருத்து

அவர் அனுபவத்தை பெறும் பொழுது இந்த சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக் கொள்வார். ஆனால் நாம் இன்று நமக்குத் தெரிந்த கில்லை பார்த்தோம். அவரிடம் பவர், டைம், இன்டெண்ட் எல்லாமே இருந்தது. அவர் கிரீசில் நின்று கட்டளை இட்டார். மேலும் மைதானம் முழுவதும் ஸ்கோர் செய்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -