“U19 உலககோப்பையை பிசிசிஐ நடத்தாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்” – உண்மையை உடைத்த சவுரவ் கங்குலி

0
243
U19wc

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவில் உலகக் கோப்பை தொடர் நடத்தி வருகிறது.

இந்த முறை உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

- Advertisement -

இன்று இந்திய ரன் மெசின் ஆக இருக்கும் விராட் கோலி, ரிஷப் பண்ட், கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா என எல்லோரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு உள்ளே வந்தவர்கள்.

இந்திய அணி இந்த தொடரில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியாகவும், தொடர்ந்து ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியாகவும், நடப்பு சாம்பியனாகவும் இருக்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த 19 வயதுக்கு உட்பட்டவர்கள் உலகக் கோப்பை தொடரிலும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆறு ஏழு வீரர்கள் மற்றும் பந்துவீச்சில் நம்பிக்கை ஆன நான்கைந்து வீரர்கள் என எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய திறமையுடன் வீரர்கள் தென்படுகிறார்கள்.

- Advertisement -

இப்படி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானதாக இருந்தோம், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்தும், இதுவரையில் ஒரு அண்டர் 19 உலக கோப்பையை கூட இந்தியா நடத்தியது கிடையாது. லாபம் இல்லாத காரணத்தினால் இந்தியா இதை நடத்துவதில்லை என்கின்ற பேச்சும் இருக்கிறது.

இது குறித்து பேசி உள்ள சவுரவ் கங்குலி “இந்தியா அண்டர் 19 உலக கோப்பையை நடத்தாமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. மற்ற வடிவங்களில் சீனியர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன. உலகக்கோப்பை தொடர்கள் அடிக்கடி நடைபெறாத நாடுகளில் இப்படியான உலகக் கோப்பை தொடர்கள் விளையாடினால் என்ன தவறு? இது கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும்.

இதையும் படிங்க : “இப்ப இந்திய அணியில் இவருக்கு நான் பெரிய ரசிகன்.. 2005 சம்பவம் ஞாபகத்துக்கு வருது” – அஸ்வின் பேட்டி

அண்டர் 19 உலககோப்பை தொடர் நஷ்டத்தை தரக்கூடியதாக நீங்கள் கூறலாம். இது உண்மையில் லாப நோக்கத்தில் நடத்தப்படக்கூடிய தொடர் கிடையாது. இந்த காரணத்திற்காக இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தாமல் இல்லை. எதிர்காலத்தில் இந்தியாவில் இந்த உலகக் கோப்பை தொடர் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.