வரலாறு காணாத விலையைக் கொடுத்து மீண்டும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது சோனி – டிஜிட்டல் உரிமத்தை இழந்த ஸ்டார் நிறுவனம்

0
274

2018 முதல் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றி தக்க வைத்திருந்தது. 16,347.50 கோடி ரூபாய்க்கு ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.2023 முதல் 2027 ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை இன்று வெற்றிகரமாக சோனி மற்றும் வியாகாம் நிறுவனம் மூலமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு ஐபிஎல் போட்டிக்கான மீடியா உரிமையின் விலை 107.50 கோடி

- Advertisement -

44,075 கோடி ரூபாய்க்கு இந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை பிசிசிஐ இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்துள்ளது. சோனி நிறுவனம் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளது. அடுத்த 5 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு சோனி நெட்வொர்க்கில் நாம் கண்டு களிக்கலாம். 23,575 கோடி ரூபாய் கொடுத்து தொலைக்காட்சி உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 410 போட்டிகள் அடங்கிய இந்த கால இடைவெளியில்(2023-2027) ஒரு போட்டியின் தொலைக்காட்சி உரிமையின் விலை 57 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகும்.

மறுபக்கம் வியாகாம் நிறுவனம் டிஜிட்டல் உரிமையை 20,500 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. டிஜிட்டலில் இனி வூட் செயலியில் நாம் ஐபிஎல் போட்டிகளை கண்டு களிக்கலாம். ஒரு ஐபிஎல் போட்டியின் டிஜிட்டல் உரிமையின் விலை 50 கோடி ரூபாய் ஆகும்.

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என இரண்டையும் இணைத்து வைத்துப் பார்த்தால் ஒரு ஐபிஎல் போட்டிக்கான மீடியா உரிமையின் விலை 107 கோடியே 50 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடிப்படைத் தொகை என பிசிசிஐ நிர்ணயித்த 39,000 கோடியை விட 5 ஆயிரம் கோடி ரூபாய் அதிக அளவில் உரிமை விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகால உரிமையை விட இந்த ஐந்து ஆண்டுக்கான உரிமை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளதம் குறிப்பிடத்தக்கது.