“400 ரன் அடிக்கணும்னு பாபர் அசாம்கிட்ட யாராவது போய் சொல்லுங்க!” – கிப்ஸ் கலாய்த்து மன்னிப்பு கேட்ட சுவாரசிய சம்பவம்!

0
1233
Babar

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு சிறிய அதிர்ஷ்டம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

நேற்று பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 401 ரன்கள் குவித்த போதும் கூட, பகார் ஜமானின் அதிரடியான பேட்டி காரணமாகவும், நடுவில் மழை வந்து போட்டியை மொத்தமாக நிறுத்தியதன் காரணமாகவும், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்பொழுது டிம் சவுதி வீசிய இரண்டாவது ஓவரில் அப்துல்லா சபிக் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்ய வந்தார்.

அதற்கு அடுத்து ஒரு இரண்டு மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிய பாபர் அசாம், பிறகு கொஞ்சம் அதிரடியில் ஈடுபட்டு பந்துக்கு பந்து ரன் எடுக்க ஆரம்பித்தார். மேலும் பகார் ஜமானுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

உடனுக்குடன் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருந்த காரணத்தினால் பகார் ஜமான் அவருடைய வேகத்தை இழக்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடிந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் அதிரடியாக சதம் அடித்த பகார் ஜமான் பேட்டிங் முக்கியத்துவம் பெற்றது போலவே, அவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங்கும் நல்ல முறையிலேயே இருந்தது.

ஆனால் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கிப்ஸ் பாபர் அசாம் முதலில் விளையாடுவதை பார்த்து, தன்னுடைய சமூக வலைதள கணக்கில் “பாபர் அசாமிடம் யாராவது போய் சொல்லுங்கள் அவர் 400 ரன்களை அடிக்க வேண்டும்!” கேலி செய்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கு அடுத்து போட்டி பாகிஸ்தான் பக்கம் திரும்பியதும், ரசிகர்கள் அவரது சமூக வலைதள கணக்கில் பின்னூட்டம் இட ஆரம்பித்தார்கள். உடனே அவர் ” இது அவர் ஐந்து ஓவர் வரை விளையாடியதற்கு மட்டுமே” என்றும், “இது மழைக்கு முன்னால்” என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.