“இந்தியாவை யாராவது ஒருத்தராவது தோற்கடிங்கப்பா!” – பாகிஸ்தான் ரமீஷ் ராஜா வித்தியாசமான பேச்சு!

0
4322
ICT

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியின் எழுச்சி யாரும் எதிர்பாராத விதத்தில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது!

ஆசியக் கோப்பையில் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியை, மிகச் சாதாரணமாக அடக்கி வெற்றி பெற்றது. இலங்கையில் இறுதிப் போட்டிகள் நடந்ததால், இலங்கை சவால் தரும் என்று நினைத்த நேரத்தில், அவர்களை 50 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

ஆசியக் கோப்பையில் வெளிப்படுத்திய அதே எழுச்சிமிக்க ஆதிக்கத்தை தற்பொழுது உலகக் கோப்பையிலும் இந்திய அணி தொடர்ந்து வருகிறது. இந்திய அணி இதுவரை தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும், எதிரணிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல், ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்திய பேட்டிங் வரிசையில் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் தற்பொழுது சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். பெரும்பாலும் மூன்று வீரர்கள் விளையாடி முடிக்கும் பொழுதே போட்டி பேட்டிங்கில் முடிந்து விடுகிறது. அதேபோல் இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறிது தவறு செய்தாலும், ஒட்டுமொத்தமாக அணியையே சுருட்டி விடுகிறார்கள்.

தற்பொழுது இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறும் பொழுது “இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு பவர்பிளேவில் ஸ்டிரைக் ரேட் 140 இருக்கிறது. அவர் ஏற்கனவே பவர்பிளேவில் 9 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இந்தியாவின் மிடில் ஆர்டர் மிகவும் பலமாக இருக்கிறது. அவர்களை வீழ்த்துவதற்கு கடினம். ஆனால் சிறப்பாக விளையாடி அவர்களை யாராவது தோற்கடிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை தவிர வேறு எந்த அணியும் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் முதல் 5 பேட்ஸ்மேன்கள் ரன் சராசரியில் 50 க்கு மேல் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நன்றாக சிக்சர் அடிக்கக்கூடியவர்கள். அவர்களின் ஸ்டிரைக் ரேட் இன்னும் நன்றாக இருக்கிறது. சிறந்த தரமும் இருக்கிறது. அவர்கள் புத்திசாலித்தனமான கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அவர்களின் பந்துவீச்சும் இப்படியானதே!

விராட் கோலி சேஸ் செய்வதை விரும்புகிறார். மேலும் அவர் கூறும் மிகப்பெரிய வீரர். கடந்த போட்டியில் இருந்த ஆடுகளத்தில் பங்களாதேஷின் பந்துவீச்சு சவால் ஆனது கிடையாது. சதம் என்றால் சதம். அவர் ஒவ்வொரு பந்தையும் மிகுந்த ஆர்வத்துடனும் உறுதியுடனும் விளையாடுகிறார். விராட் கோலி மைதானத்தில் இருப்பது கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம்!” என்று கூறி இருக்கிறார்!