கோலியுடன் என்னை கம்பேர் பண்ணாதிங்க.. கோப்பையை வென்ற பின் ஸ்மிருதி மந்தனா பேட்டி

0
117
Virat

இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த மகளிர் டி20 லீக் டபுள்யு.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

17 ஆண்டுகளாக தொடர்ந்து பிரான்சிசைஸ் டி20 லீக்கில் இருந்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, அந்த அணிக்காக பெண்கள் அணி கைப்பற்றிய இந்த சாம்பியன் பட்டம்தான் முதல் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆண்டுகளாக விளையாடி வரும் ஆண்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரையில் எந்த பட்டத்தையும் வென்றது கிடையாது.

- Advertisement -

எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெண்கள் கிரிக்கெட் அணி முதல் பட்டத்தை அந்த அணி நிர்வாகத்திற்காக வென்றதை, அந்த அணி நிர்வாகம், அணியின் ரசிகர்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணியினர் என எல்லோருமே மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள்.

அதே சமயத்தில் இன்னொரு பக்கமாக பெண்கள் ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை, ஆண்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி உடன் ஒப்பிட்டு சில ஏற்க முடியாத கருத்துக்களை சிலர் பேசி வருகிறார்கள். ஆண்கள் ஆர்சிபி அணியால் செய்ய முடியாததை பெண்கள் ஆர்சிபி அணி செய்து விட்டார்கள் என்று கேலி, கிண்டல்கள் நிறைய சமூக வலைதளத்தில் பரவுகின்றன.

கம்பேர் பண்ணாதீங்க

இதுகுறித்து ஆர்சிபி பெண்கள் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறும் பொழுது “டைட்டில் வெல்வது ஒரு விஷயம்தான். ஆனால் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார். அவர் அனைவருக்கும் உத்வேகம் தரக்கூடிய ஒருவராக இருக்கிறார். எனவே தொழில்முறை அடிப்படையில் என்னையும் அவரையும் ஒரே அளவில் வைத்து ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானது.

- Advertisement -

என்னை அவருடன் ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு சாம்பியன் பட்டத்தை வெல்வது மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை. நாங்கள் அனைவரும் விராட் கோலியை மிகவும் மதிக்கிறோம். இந்திய கிரிக்கெட்டில் அவர் செயல்பட்ட விதத்திற்கு அவர் இன்னும் நிறைய மதிக்கப்பட வேண்டியவர் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சர்துல் தாக்கூர் வைத்த அதிரடி குற்றச்சாட்டு.. மாற்றத்திற்கு முன்வந்த பிசிசிஐ.. புதிய குழு அமைப்பு

நான் 18 ஆம் நம்பர் கொண்ட ஜெர்சி அணிந்திருக்கிறேன். இதனால் அவருடன் என்னை ஒப்பிடுவது சரி கிடையாது. இந்த ஜெர்சியை அணிவதால் நான் அவர் ஆகி விட முடியாது. இந்த ஜெர்ஸி நம்பரை தேர்ந்தெடுப்பது எல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது மட்டும்தான். இது எதையும் வரையறை செய்யாது” என்று கூறி இருக்கிறார்.