ரோகித் சூர்யா ஈகோ எதுக்கு.. பெரிய ஆளா இருந்தா நல்ல பவுலிங்கை மதிக்க கூடாதா?.. சேவாக் விமர்சனம்

0
1582
Sehwag

நேற்று மும்பை அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பேட்மேன்கள் பொறுப்பான முறையில் விளையாடவில்லை என சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.

மழையால் பாதிக்கப்பட்டு பதினாறு ஓவர்களாக குறைக்கப்பட்ட, குறிப்பிட்ட இந்த போட்டியில் நேற்று கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து நோக்கி 167 ரன்கள் எடுத்தது. அத அணிக்கு வெங்கடேஷ் செய்ய 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி விக்கெட் இழப்பில்லாமல் 6.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்திருந்து, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரிடமும் சிக்கி, எட்டு விக்கெட்டுகளை இழந்து அங்கிருந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் 139 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “நீங்கள் ரோகித் சர்மாவாக இருக்கலாம் இல்லை சூரியகுமார் யாதவாக இருக்கலாம். நீங்கள் பந்துவீச்சாளர்களை மதிக்காவிட்டால் கூட நல்ல பந்து வீச்சை மதிக்க வேண்டும். ரோகித் சர்மா ஆட்டம் இழந்தது பலவீனமான ஒரு பந்தில் கிடையாது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருவருமே சிறந்த வீரர்கள். ஆனால் நீங்கள் நல்ல பந்துகளையும் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

- Advertisement -

யார் நன்றாக பந்து வீசினாலும் அவர் ஆட்டம் இழக்கிறார். ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் ஒரு ஓவருக்கு முன்பாகவே போட்டியை முடித்திருக்க முடியும். கடைசியில் பந்து வீசுவதற்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் ரோகித் சர்மா சுழல் பந்துவீச்சாளர்களை அடிப்பதற்கு சென்று ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : நாங்க ஜெயிப்போம்னு இந்த விஷயத்தால நல்லா தெரியும்.. சூர்யாவுக்கு பிளான் சிம்பிளானது – ரசல் பேட்டி

நீங்கள் பேட்டிங் செய்ய வரும் பொழுது உங்களுக்கு ஈகோ இருக்க கூடாது. நமன் திர் கடைசியில் வந்து ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இதுவே களத்தில் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் செட்டாகி இருந்திருந்தால், அவர்கள் ஒரு ஓவருக்கு ஐந்து பவுண்டரிகள் கூட அடித்திருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -