சர்துல் தாக்கூர் வைத்த அதிரடி குற்றச்சாட்டு.. மாற்றத்திற்கு முன்வந்த பிசிசிஐ.. புதிய குழு அமைப்பு

0
3641
Shardul

இந்த ஆண்டு இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபி சீசனில் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக விளையாடி மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் முடிந்ததும், உடனடியாக ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் திரும்பினார்கள்.

மும்பை இந்த ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் சர்துல் தாக்கூர் மிகப்பெரிய பங்களிப்பை செய்தார். மேலும் அவர் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருப்பது அவருக்கு சிறப்பான ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.

- Advertisement -

சர்துல் தாக்கூர் செய்த சம்பவம்

இந்த நிலையில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சர்துல் தாக்கூர் “ரஞ்சி தொடரில் ஒரு போட்டிக்கு மற்றொரு போட்டிக்கும் இடையே நாட்கள் வெகு குறைவாக இருக்கிறது. முன்பு போட்டிகளுக்கு இடையே நாட்கள் மிக அதிகமாக இருந்தது. மேலும் இறுதிப் போட்டி வரை வரக்கூடிய அணி 10 போட்டிகளில் விளையாட வேண்டும். இப்படி குறைந்த இடைவெளியில் விளையாடினால் அடுத்த இரண்டு வருடங்களில் நிறைய இந்திய வீரர்கள் காயம் அடைந்திருப்பார்கள். பிசிசிஐ இதைப்பற்றி யோசிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

சர்துல் தாக்கூர் பேசிய விஷயத்தை எடுத்துப் பேசிய ராகுல் டிராவிட் “சர்துல் தாக்கூர் பேசிய கருத்தை என்னிடம் அணிக்குள் வந்த சில இளம் வீரர்கள் கூறினார்கள். இந்த விஷயத்தில் வீரர்களிடம் கேட்டுதான் முடிவு எடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் உடலை வருத்தி விளையாடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சில போட்டிகள் வேண்டுமா? என்பது குறித்தும் யோசிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தற்போது இந்த விஷயத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் மிகப்பெரிய ரஞ்சி டிராபி தொடர் முடிந்ததும் இந்திய உள்நாட்டு வீரர்கள் அடுத்த இரண்டு மாதங்கள் நடக்கும் பெரிய ஐபிஎல் தொடருக்கும் தயாராக வேண்டி இருக்கிறது.

- Advertisement -

மேலும் ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்ற இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் தட்பவெப்ப நிலை பிரச்சனையை உண்டாக்கியது. இதனால் போட்டிகள் பாதிக்கப்பட்டன. எனவே ரஞ்சி டிராபியை எப்படி நடத்தலாம் என தீவிரமாக பிசிசிஐ யோசிக்கிறது.

இதையும் படிங்க : தோனி கிடையாது.. சிஎஸ்கே-வில் இடம் கிடைக்க உதவிய முன்னாள் இந்திய கேப்டன்.. அஸ்வின் வெளியிட்ட தகவல்

இந்த இரண்டு விஷயங்களுக்கும் தீர்வு காணும் விதமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் புது மேலாளர் அபே குருவில்லா ஆகிய நால்வர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது. இவர்கள் இது குறித்து ஆலோசித்து தங்களுடைய இறுதி கருத்தை பிசிசிஐ இடம் கொடுப்பார்கள். எல்லா வீரர்களுக்கும் சேர்த்து சர்துல் தாக்கூர் பேசிய முக்கிய விஷயம், தற்பொழுது பிசிசிஐ கவனத்திற்கு வந்து தீர்வுகாண இருப்பது அவருக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது!