ஸ்மித் ஸ்டார்க் தொடர்ந்து மேலும் ஒரு அதிரடி ஆஸி வீரர் ரூல்ட் அவுட்.. உலக கோப்பைக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி!

0
5654
Smith

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்புகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன!

இந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செப்டம்பர் 7ஆம் தேதி ஆரம்பித்தது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்த இரண்டு ஆஸ்திரேலியா அணிகளுக்கும் மிசட்சல் மார்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். உலகக் கோப்பைக்கு முன்பாக பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது.

இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் ஸ்டார்க் இருவரும் விலகுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவிற்கு எதிராக உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய மண்ணில் விளையாட இருக்கும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு, இவர்கள் வருவதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு தீ விபத்தில் கால் முடிவு ஏற்பட்டு, காலில் தகடு பொருத்தப்பட்டுள்ள மேக்ஸ்வெல், தற்போது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து கணுக்கால் காயத்தால் விலகி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறார். அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு திரும்புவாரா? என்பதும் சந்தேகமே. இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் அணிக்கு மேத்யூ வேட் அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தரப்பில் “இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கிளன் மேக்ஸ்வெல் குணமடைவதை நாங்கள் கண்காணிப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஜாம்பா.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மாக்ஸ்வெல் சங்கா, மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.