ஆஸிக்கு மீண்டும் ஸ்மித் கேப்டன்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட 13 பேர் கொண்ட அணி.. அடுத்த கோப்பைக்கு குறி!

0
1025
Smith

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மூவருக்கும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பெரிய சரிவை சந்தித்தது. இதற்குப் பிறகு படிப்படியாக அங்கிருந்து முன்னேறிய ஆஸ்திரேலியா 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இதற்கடுத்து பேட் கம்மின்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட, அவரது தலைமையின் கீழ் புதிய அணுகுமுறை கொண்ட ஆஸ்திரேலிய அணி கம்பீரமாக வெற்றி நடை போட துவங்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசஸ், ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை என கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா சிறப்பான வெற்றிகளை குவிக்க ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் பழைய ஆஸ்திரேலியா அணியை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய மூவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பிப்ரவரி 2ல் துவங்கும் மூன்று கூட ஒரு நாள் தொடருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்த தொடருக்கு ஸ்மித் தலைமையில் 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக வரக்கூடிய வீரர்களுக்கு தனிப்பட்ட கிரிக்கெட் அனுபவத்தை உருவாக்குவதற்கு, சில அனுபவம் வாய்ந்த வீரர்களையும் உள்ளடக்கிய அணி அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி :

ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், ஜே ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட் மற்றும் ஆடம் ஜாம்பா.