ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டம்..2024 ஐபிஎல் சீசனில் அறிமுகமாகிறது.. இனி தப்பவே முடியாது

0
829
IPL

ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு ஆண்டுக்கு ஆண்டுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் குழு தொடரை சுவாரசியமாகவும், மேற்கொண்டு தரத்தைக் கூட்டவும்அதிகப்படியான முயற்சிகளை ஒவ்வொரு ஆண்டிலும் செய்து வருகிறது.

கடந்த ஆண்டில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டதோடு, கூடவே இரண்டு பிளேயிங் லெவனை அமைத்துக் கொள்ளும் வசதியும் கொண்டுவரப்பட்டது. டாஸ் போடப்பட்டதற்கு பிறகு, பேட்டிங் பவுலிங் தீர்மானம் ஆனபின், அதற்கேற்ற பிளேயிங் லெவனை கொடுக்கலாம்.

- Advertisement -

இந்த இரண்டு புதிய விதி அறிமுகத்தால் ஆட்டத்தில் போட்டித்தன்மை மிகவும் அதிகரித்தது. இதனால் தரம் கூடி ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் கிடைத்தது. அதேபோல் இரண்டு பிளேயிங் லெவன் கொடுக்கப்படுவதால், பனிப்பொழிவு போன்ற விஷயங்களை டாஸ் வெல்லும் அணி ஆட்டத்தையும் வெல்லும் வாய்ப்பு குறைக்கப்பட்டது. இதனால் டாசை தோற்றாலும் கூட ஆட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன.

ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டம்

இந்த நிலையில் இந்த ஆண்டு ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டம் என்ற புதிய முறையை ஐபிஎல் தொடரில் பிசிசிஐ அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த சிஸ்டம் இங்கிலாந்து நடத்தும் ஹண்ட்ரட் தொடரில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்பொழுது இது இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கும் வருகிறது.

மொத்தம் மைதானத்தில் எட்டு ஹாக்-ஐ கேமராக்கள் மூலம் ரிவ்யூ செய்வதற்கான கோணங்கள் படம் பிடிக்கப்படும். இந்த வகையான கேமராக்கள் மூலம் வழக்கமாக 50 பிரேம்களில் பதிவு செய்யப்படுவது 300 பிரேம்களில் பதிவு செய்யப்படும். இதனால் வீடியோவில் துல்லியம் மிக அதிகமாக இருக்கும். எனவே கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் போன்றவற்றை மூன்றாவது நடுவர் வெகு எளிதாக கணித்து தீர்ப்பை வழங்க முடியும்.

- Advertisement -

மேலும் இதற்கு முன்னால் ஹாக்-ஐ தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒரு அறையிலும், மூன்றாவது நடுவர் குழு ஒரு அறையிலும் இருந்தார்கள். இவர்களை போட்டியை ஒளிபரப்ப கூடிய குழு ஒருங்கிணைத்து வந்தது. இனி அப்படி இல்லாமல் இருவரும் ஒரே அறையில் இருப்பார்கள்.

இதன் காரணமாக மூன்றாவது நடுவருக்கு ஒரு அவுட் தொடர்பாக என்ன கேமரா கோணம் தேவையோ, அதை அவரே நேரடியாக தன் அறையில் இருக்கும் ஹாக்-ஐ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு வாங்கி பார்த்துக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க : கேகேஆர் டீமுக்கு ஒரு சத்தியம் பண்றேன்.. நான் போறப்ப.. கம்பீர் தந்த அதிரடி உறுதிமொழி

மேலும் எல்பிடபிள்யு மற்றும் ஸ்டெம்பிங் போன்ற அவுட் குறித்து பார்க்கும் பொழுது, பந்துக்கும் பேட்டுக்கும் இடையில் இடைவெளி தெளிவாக இருந்தால், பந்து பேட்டில் பட்டு இருக்கிறதா என்று அதை மீண்டும் ஸ்னிக்கோ மீட்டரில் பார்க்க மாட்டார்கள். இதன் காரணமாக நேரம் குறைவாகும். தற்பொழுது ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் துல்லியமான மற்றும் தெளிவான கேமரா கோணங்களும் கிடைப்பதோடு, நேரமும் மீதி செய்யப்படும். இதன் காரணமாக அவுட் என்றால் தப்பிப்பது இனி கடினம்!