சின்ன கிரவுண்ட்.. கேகேஆர் கப் அடிக்கும்.. ஆனா ஆர்சிபி ஜெயிக்காது.. உண்மையான காரணம் இதுதான்!

0
327
Rcb

ஐபிஎல் தொடர்களில் பதினாறு ஆண்டுகளில் ஒரு முறை கூட நட்சத்திர வீரர்கள் பலரை வைத்திருந்தோம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதற்கு மிக முக்கிய காரணமாக அந்த அணியின் மேனேஜ்மென்ட் ஐந்தாறு வீரர்களைத் தொடர்ந்து தக்கவைத்து, ஒரு நிலையான அணியை உருவாக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பது முதலில் சின்னசாமி மைதானம்தான். மைதானம் மிகச்சிறியது மேலும் அவுட்ஃபீல்டு மிகவும் வேகமாக இருக்கும். மிக முக்கியமாக ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சொர்க்கம்.

இப்படி இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு சொந்த மைதான சாதகம் என்று எதுவும் கிடையாது. ஒரு டி20 கிரிக்கெட் அணிக்கு என்ன தேவையோ அதை வைத்திருக்கும் அணி வந்தால், சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணியை சுலபமாக தோற்கடிக்க முடியும்.

அதே சமயத்தில் சின்னசாமி மைதானம் போலவே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானமும் அமைந்திருக்கிறது. ஆனால் அவர்கள் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை ஐபிஎல் தொடரை வென்று இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அவர்களுடைய ஆடுகளம்.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற ஆண்டுகளில் அவர்களுக்கு தொடர்ச்சியாக அங்கு மெதுவான மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கிடைத்தது. அதற்குத் தகுந்தது போல அவர்கள் ஒரு அணியை உருவாக்கி, அதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும் விதமாக வெற்றிகள் பெற்று கோப்பையை கைப்பற்றினார்கள்.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மீண்டும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மெதுவான மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் காணப்பட்டது. எனவே இந்த முறை அமைந்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றால் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது.

அந்த அணியில் தற்பொழுது சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சுயாஸ் சர்மா, முஜீப் ரகமான் மற்றும் அனுக்குல் ராய் என விதவிதமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தற்பொழுது ஸ்ரேயா திரும்பி இருப்பதால் அவர்கள் பலமும் கூடியிருக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சில் ஸ்டார்க் வந்திருக்கிறார்.

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எடுத்துக் கொண்டால், அவர்களுடைய சொந்த மைதானத்திற்கு எப்படியான அணியை உருவாக்கினாலும், அவர்களுக்குசொந்த மைதானத்தின் சாதகங்கள் என்று எதுவும் இல்லாததால், அவர்களால் தொடர்ந்து முன்னேறி செல்ல முடியவில்லை. தற்பொழுது இந்தப் பிரச்சனை குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!