SLvsAFG டெஸ்ட்.. 2 சதம்.. 410 ரன்.. இலங்கை ஆப்கான் அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டி

0
246
Srilanka

ஆப்கானிஸ்தான அணி ஒரே ஒரு போட்டி மட்டும் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்தப் போட்டி நேற்று முதல் இலங்கை கொழும்பு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இலங்கை அணிக்கு தனஞ்செய டி சி ல்வா கேப்டனாக இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹசமத்துல்லா ஷாகிதி கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்துகிறார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் இப்ராஹிம் ஜட்ரன் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டத்தில் இரண்டாவது பந்திலேயே வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹமத் ஷா சிறப்பாக விளையாடிய 131பந்தில் 13 பவுண்டரிகள் உடன் 91 ரன்கள் எடுத்தார். மேலும் நூர் அலி ஜட்ரன் 31, இக்ரம் அலிகில் 21, க்யாஸ் அகமத் 21, கேப்டன் ஹசமத்துல்லா ஷாகிதி 17 என சொற்ப பங்களிப்பு மட்டுமே தந்தார்கள்.

ஆப்கானிஸ்தான அணி முதல் இன்னிங்ஸில் 62.4 ஓவர்களில் 198 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. விஷ்வ பெர்னாடோ 4, அஸித பெர்னாடோ 3, பிரபாத் ஜெயசூர்யா 3 என விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணிக்கு நிஷாந்த் மதுஷ்கா 37, திமுத் கருணரத்தினே 77, குசால் மெண்டிஸ் 10 ரன்கள் என வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடி 232 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது.

தினேஷ் சண்டிமால் 107, ஏஞ்சலோ மேத்யூஸ் 141, கேப்டன் தனஞ்செய டி சில்வா 0 ரன்கள் என ஆட்டம் இழந்தார்கள். தவிர சமர விக்ரமா 21 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இலங்கை அணி இரண்டாம் நாள் முடிவில் 101.2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலி விளையாடாத காரணம்.. வார்த்தை மீறி உண்மையை வெளியிட்ட டிவிலியர்ஸ்

ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் ஜட்ரன் மற்றும் க்யாஸ் அகமத் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த போட்டியில் இலங்கை அணி வெல்வதற்கே அதிகபட்ச வாய்ப்புகள் தெரிகிறது.