விராட் கோலி விளையாடாத காரணம்.. வார்த்தை மீறி உண்மையை வெளியிட்ட டிவிலியர்ஸ்

0
140
Devilliers

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார்.

மேலும் அவரது விலகல் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர், அணி நிர்வாகத்திற்கு விராட் கோலி பேசி இருக்கிறார் என்றும், அவரது விலகல் குறித்து யூகமாக எதையும் வெளியில் பேச வேண்டாம் என்றும் பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் விளையாடி இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் முதல் டெஸ்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்து தோற்றதால், இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

மேலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலி களத்தில் இருந்திருந்தால் விஷயம் வேறு மாதிரியாக நடந்திருக்கும் என பேச ஆரம்பித்தார்கள். இந்த பேச்சு இன்றைய நாள் போட்டியின் போதும் முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் வர்ணனையில் பேசுவதைக் கேட்க முடிந்தது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியில் விராட் கோலி உடன் ஒன்றாக இணைந்து விளையாடி வரும், இதனால் அவரது நண்பருமாக இருக்கின்ற ஏபி.டிவில்லியர்ஸ் விராட் கோலி விளையாடாததின் உண்மை காரணம் தனக்குத் தெரிந்து விடும் என்றும், ஆனால் அவரது நட்பு தனக்கு முக்கியம் என்பதால் வெளியில் கூற முடியாது என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி வருவாரா? என அவரது யூடியூப் சேனலில் கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் போதுதான், ஏபி.டிவில்லியர்ஸ் தான் பேசிய வார்த்தைகளை மீறி விராட் கோலி விளையாடாததின் உண்மை காரணத்தை மட்டும் கூறியிருக்கிறார். வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறவில்லை.

இதையும் படிங்க : “எத்தனை பேரை பார்த்திருக்கேன்.. இந்தியாவுல இத செய்ய தெரியனும்” – பும்ரா மாஸ் ஸ்பீச்

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பதில் அளிக்கும் போது ” விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார்கள். எனவே இந்த நேரத்தில் விராட் கோலி தன் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறார். இதனால்தான் அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு வரவில்லை” எனக் கூறியிருக்கிறார்.