டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா மிக கம்மியான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய போட்டிகள்

0
698
Cheteshwar Pujara in Test

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எப்படி ராகுல் டிராவிட் அவர் விளையாடிய காலத்தில் இந்திய அணியை பல ஆட்டங்களில் காப்பாற்றினாரோ அதேபோல தற்போது புஜாரா இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் நிறைய முறை காப்பாற்றி வருகிறார்.

இந்திய அணியில் ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டு போகும் வேளையில், தனது தடுப்பாட்டம் மூலம் விக்கெட் போகாமல் பார்த்துக் கொள்வார். அதே சமயம் இந்திய அணி நிச்சயமாக தோல்வி அடைந்துவிடும் என்கிற நிலையில் இருக்கும் பொழுது, தன்னுடைய தடுப்பாட்டம் மூலமாக மிகச் சிறப்பாக போட்டியை இறுதி வரை கொண்டு சென்று சமனில் முடிவடைய செய்வார்.

- Advertisement -

இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6252 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பந்துகளை பிடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவரேஜ் 46.31 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 44.79 ஆகும்.

புஜாரா இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மிகவும் கம்மியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகள் (குறைந்தது 20 பந்துகள்) எவை என்று தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இங்கிலாந்துக்கு எதிராக 2018

இங்கிலாந்துக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் புஜாரா 25 பந்துகளில் பிடித்து வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்தார். கிட்டத்தட்ட 5 ஓவர்கள் பிடித்து வெறும் ஒரு ரன் மட்டுமே புஜாரா எடுத்தார். இது அவருடைய மிக கம்மியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக 2016

2014 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து அணியுடன் புஜாரா தன்னுடைய வழக்கமான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டார். இங்கிலாந்துடன் மோதிய டெஸ்ட் போட்டியில் 24 பந்துகளில் பிடித்து ஒரு ரன் மட்டுமே அவர் குவித்தார். 3 ஓவர்களுக்கு மேல் விளையாடி மீண்டும் ஒரு ரன் மட்டுமே புஜாரா குவித்தார். இந்தப் போட்டியும் அவர் மிக கம்மியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 2020

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணியுடன் விளையாடிய டெஸ்ட் போட்டியில் புஜாரா மிகப்பெரிய தடுப்பாட்டம் மேற்கொண்டார். அந்த போட்டியில் 81 பந்துகளில் பிடித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே ஒரு கட்டத்தில் குவித்தார்.

கிட்டத்தட்ட 14 ஓவர்களுக்கு மேல் பிடித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே புஜாரா அந்த போட்டியில் குவித்தார். இந்த போட்டி அவர் மிக கம்மியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய போட்டிகளில் முதன்மையான போட்டியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.