“நாயகன் மீண்டும் வாரான்” டி20 தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 சூரியகுமார் யாதவ்! இம்முறை இன்னும் அசுரபலத்தில்..

0
936

டி20 தரவரிசை பட்டியலில் 895 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார் சூரியகுமார் யாதவ்.

டி20 உலகக்கோப்பை தொடரில் எதிரணியை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் பின்னிப்பெடலெடுத்து, 6 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 239 ரன்கள் விளாசி அசத்திய சூரியகுமார் யாதவ், உலகக்கோப்பை முடிந்தவுடன் வெளியிடப்பட்ட டி20 தரவரிசையில் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இத்தொடரின் 2வது போட்டியில் சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதுதான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது.

நியூசிலாந்து-இந்தியா தொடர் முடிவுற்றவுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் 890 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்த டேவான் கான்வாய் 1 இடம் முன்னேறி 788 புள்ளிகளுடன் 3வது இடத்தில இருக்கிறார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில இருக்கும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் 839 புள்ளிகள் பெற்றுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, 194 புள்ளிகள் பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பது சற்று வருத்தமளிப்பதாக உள்ளது.

- Advertisement -

இதற்க்கு முன்னர் டி20 தரவரிசையில் அதிகபட்சமாக இந்திய வீரர் பெற்ற புள்ளிகள் 897 ஆகும். இந்த பெருமை விராட் கோலியை சேரும். தற்போது சூரியகுமார் யாதவ் அதனை நெருங்கி வருகிறார். இவர் பெற்றிருக்கும் 890 புள்ளிகள் இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.