டிரேடிங் செய்யப்படும் சிராஜ்?.. ஆர்சிபி-ல் பும்ரா?.. சோகமான பதிவு.. என்ன நடக்கிறது?

0
7929
Siraj

ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்க நடக்க் முழுக்க தொழில்முறையாக மாறிவிட்டது. இந்த காரணத்தால்தான் குஜராத் டைட்டன்ஸ் கடினமான காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்ததை தாண்டி, அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் சென்றார்.

தற்பொழுது அணியை வலிமைப்படுத்துவது எப்படி என்பது பற்றி மட்டுமே யோசிக்கப்படுகிறது. எனவே இங்கு தனிப்பட்ட உணர்வுகளுக்கு பெரிய மரியாதை எதுவும் கொடுக்கப்படுவது இல்லை.

- Advertisement -

இந்த வகையில்தான் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவைக்காக, மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மாவை மாற்றி ஹர்திக் பாண்டியாவை அதிரடியாக கேப்டனாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்னும் டிரேடிங் செய்யும் காலம் முடிவடையாமல் இருப்பதால், சில வீரர்கள் வேறு அணிகளுக்கு டிரேடிங் செய்யப்பட இருக்கிறார்கள் என்கின்ற தகவல்கள் கசிந்து கொண்டே இருக்கிறது. அது குறித்த பேச்சு வார்த்தைகளும் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று எந்தவித சம்பந்தமும் இல்லாமல் உடைந்த இதயம் கொண்ட புகைப்படத்தை இந்திய மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பெங்களூரு அணிக்கு விளையாடும் முகமது சிராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதேபோல்தான் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கொண்டு வந்தபொழுது ஜஸ்பிரித் பும்ரா பதிவு செய்திருந்தார். இந்த இரண்டு பதிவுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகளாக இருக்கின்றன.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் பும்ரா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வர இருப்பதாக பேச்சுவார்த்தைகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முகமது சிராஜ் டிரேடிங் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இன்று முகமது சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உடைந்த இதயம் கொண்ட எமோஜி பதிவுஅமைகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!