“டிராவிட் ஸார் எனக்கு இத சொல்லி இருக்கார்.. பயிற்சி செய்யறத மாத்திட்டேன்!” – ரிங்கு சிங் அசத்தல் பேட்டி!

0
260
Rinku

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும் ரிங்கு சிங்கை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தேர்வு செய்யாமல் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு சற்று பொறுமை காத்தது.

ஆனால் அதற்குப் பிறகு அயர்லாந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர், தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் வாய்ப்பை இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு முதல்முறையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் ரிங்கு சிங் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதும், கொடுக்கப்பட்ட வாய்ப்பை ரிங்கு சிங் எந்த அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார் என்பதும் தெரிகிறது. நாளை தென் ஆப்பிரிக்காவில் அந்த அணியை எதிர்த்து விளையாட இருக்கும் ரிங்கு சிங் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்திய விக்கெட்டுகளில் விளையாடியதை விட, நான் இங்கு விளையாடிய பொழுது கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருக்கிறது. மேலும் வேகமும் சற்று அதிகமாக இருக்கிறது. எனவே நான் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக பயிற்சி செய்து வருகிறேன்.

- Advertisement -

முதல் பயிற்சி அமர்வில் நல்ல வானிலை இருந்தது நான் அதை ரசித்தேன். ராகுல் டிராவிட் ஸாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு நல்ல உணர்வு. நான் விளையாடும் படியே தொடர்ந்து விளையாடவும், நான் என் மீது தொடர்ந்து நம்பிக்கை கொள்ளவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

அவர் என்னிடம் பேசிய பொழுது ‘ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் விளையாடுவது மிகவும் கடினமானது. எனவே நீங்கள் விளையாடுகின்றபடியே, உங்களை நீங்கள் நம்பி தொடர்ச்சியாக எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்.

நான் 2013 ஆம் ஆண்டு முதல் உத்தரபிரதேச அணிக்காக இப்படியான இடத்தில் பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். எனவே நான் இந்தச் சூழ்நிலைக்கு பழகி விட்டேன். முதலில் நான்கு ஐந்து விக்கெட்டுகள் விழுந்து விட்டால் இந்த இடத்தில் விளையாடுவது கடினமானது. எனவே இந்த இடத்தில் நான் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

இந்த இடத்தில் கடினமான நேரங்களில் நீங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். எனவே நான் எனக்கு எப்பொழுதும் சொல்லிக் கொள்வது, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் மிகவும் அமைதியாக விளையாட வேண்டும் என்பதுதான்.

நாங்கள் ஏற்கனவே இருந்த குழுவில் இருந்து அர்ஸ்தீப், ரவி பிஸ்னாய், ஆவேஷ்கான், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக வருகிறோம். எங்களுக்குள் நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது. கிரிக்கெட்டில் இது மிகவும் முக்கியமானது!” என்று கூறி இருக்கிறார்!