அர்ஜூனை கூப்பில் உட்கார வைத்துவிடாதீர்..டிரெண்ட் பெளல்ட் மாதிரி வருவார்.. சைமன் தூல் அறிவுரை

0
4424

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சில் தற்போது பாஸ் மார்க் பெற்றுள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்கள் வழங்கினார்.

இதை தவிர மற்ற போட்டிகளில் எல்லாம் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் அர்ஜுன் டெண்டுல்கர் 20 ரன்களை தற்காத்து மும்பை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

- Advertisement -

  அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தை மட்டும் அதிகரித்தால் சிறந்த பவுலராக வருவார் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் தூல், அளித்துள்ள பேட்டியில் அர்ஜுன் டென்டல்கரை கடைசி கட்ட ஓவர்களில் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் சொதப்பிவிட்டார் என்பதற்காக அவரை கூப்பில் வைத்து விடாதீர்கள். அவர் இதுவரை நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால்  அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி கட்ட ஓவர்களில்  ஏற்ற வகையில் பந்து வீசவில்லை என்று ரோகித் சர்மாவுக்கு தெரியும்.

கடைசி ஐந்து ஓவர்களில் அர்ஜுன் டெண்டுல்கரை பயன்படுத்தக்கூடாது. ஆனால் ரோஹித் சர்மா பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அந்த ஒரு வாய்ப்பை கொடுத்தார். அர்ஜுன் டெண்டுல்கர் நியூசிலாந்து வீரர் பெளல்ட் மற்றும் தீபக் சாகர் போன்று ஆரம்ப கட்டத்தில் மூன்று ஓவர்களை வீசி விட வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் பந்து ஸ்விங் ஆகும் போது அவர்களால் நன்றாகவே செயல்பட முடியும். ஆனால் அதன் பிறகு இந்த வீரர்கள் இருப்பதையே மறந்து விட வேண்டும். கடைசி கட்ட ஓவர்களை வீச இன்னும் அர்ஜுன் டென்டல்கருக்கு அனுபவம் வரவில்லை. அதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி பொறுமை காக்க வேண்டும் என்று சைமன் தூல் வலியுறுத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கருக்கு  குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஓவர்களை தான் வழங்கி வருகிறது. அவரோட திறமையை சோதிக்க பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இறுதி கட்டத்தில் ஓவர் வழங்கியது பெரும் தவறாக அமைந்தது.

எனினும் இதற்கு அடுத்த போட்டியில் குஜராத்துக்கு எதிராக இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.பேட்டிங்கிளும் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் நிறைய வாய்ப்பு கிடைத்தால், அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை வளர்த்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.