ஹர்திக்கு ஏதோ நடந்திருக்கு.. அவர் மறைக்கிறார்.. 3 போட்டியா இதை கவனிச்சீங்களா? – சைமன் டால் குற்றச்சாட்டு

0
336
Hardik

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் செய்து கேப்டன் ஆக்கி, ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. இந்தப் பிரச்சனை இன்று வரையில் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களால் எதிரொலிக்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டால் புதிய குற்றச்சாட்டு ஒன்றை ஹர்திக் பாண்டியா மேல் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத், ஹைதராபாத், மற்றும் ராஜஸ்தான் என மூன்று அணிகளுக்கு எதிராகவும் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஏற்கனவே கேப்டன் மாற்றத்தால் இருந்த அதிருப்தி, இந்த தோல்விகளால் இன்னும் கடுமையாக மாறியது.

- Advertisement -

இதற்கு அடுத்து சொந்த மைதானமான மும்பை வான்கடேவில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு வெற்றிகளை பெற்று, புள்ளி பட்டியலில் சற்று மேலே வந்து ஏழாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட எதிர்ப்பு சற்று குறைந்திருக்கிறது.

அதே சமயத்தில் அணியில் பும்ரா இருக்கும்பொழுது, தோல்வி அடைந்த மூன்று போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து தானே முன் நின்று பந்துவீச்சை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் வெற்றி பெற்று இருக்கும் கடந்த இரண்டு ஆட்டங்களில் அவர் வீசியது ஒரே ஓவர் மட்டுமே. ஆர்சிபி அணிக்கு எதிராக அந்த ஒரு ஓவரை வீசி 13 ரன்கள் விட்டுத் தந்தார்.

மேலும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக இவரால் புதிய பந்தில் பந்து வீச முடிவது பெரிய பலனை கொடுக்கும். இதற்காக இவர் தயார் செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென இவர் புதிய பந்தை தொடாமல் இருப்பது குறித்து நியூசிலாந்தின் சைமன் டால் பரபரப்பான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் மாதிரி ஒரு ஆள் வேணும்.. அது மட்டும் கொண்டாட்டத்துக்கு உறுதி.. ஏன் தெரியுமா? – குல்தீப் யாதவ் பேச்சு

இதுகுறித்து சைமன் தாள் கூறும் பொழுது “முதல் போட்டியில் முதல் ஓவரை வீசி ஹர்திக் பாண்டியா ஸ்டேட்மென்ட் தருகிறார். ஆனால் திடீரென அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர் பந்து வீச்சுக்கு வரவில்லை. அவரிடம் ஏதோ தவறு இருப்பதாக நான் சொல்கிறேன். அவர் காயம் அடைந்து இருக்கிறார் ஆனால் அதை அவர் மறைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அங்கே ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது” என்று கூறியிருக்கிறார்.