ரிஷப் பண்ட் மாதிரி ஒரு ஆள் வேணும்.. அது மட்டும் கொண்டாட்டத்துக்கு உறுதி.. ஏன் தெரியுமா? – குல்தீப் யாதவ் பேச்சு

0
84
Kuldeep

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் நேற்று லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. டெல்லி அணியில் இந்த வெற்றிக்கு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய காரணமாக இருந்தார். அவர் பூரனின் வெட்கட்டை மேஜிக் பந்தில் கைப்பற்றியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பந்துவீச்சு பார்ம் இழந்து இந்திய அணி மட்டும் இல்லாமல், ஐபிஎல் தொடரில் தான் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இடம் கிடைக்காமல் போராடினார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டெல்லி அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது.

- Advertisement -

இதற்குப் பிறகு இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி துவங்கியது. டெல்லி அணிக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய இவர், அதன் காரணமாக அங்கிருந்து இந்திய அணிக்குள் மீண்டும் பிரவேசித்தார். இந்திய அணியில்மீண்டும் தன்னை நிரூபிக்க, இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடிக்கு பிறகு, எதிர்காலத்தில் இந்திய சுழல் பந்துவீச்சு யூனிட்டை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முன் நின்று நடத்தும் பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே விட்டு தந்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், கேப்டன் கேஎல்.ராகுல் ஆகிய முக்கிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதில் அபாயகரமான பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை, அவர் வந்த முதல் பந்திலேயே ஒரு அற்புதமான கூக்லி மூலம் கைப்பற்றினார். டெல்லியில் வெற்றிக்கு இதுவே அழுத்தமான புள்ளியை வைத்தது.

இதுகுறித்து பேசி இருக்கும் குல்தீப் யாதவ் கூறும்பொழுது “ரிஷப் பண்ட்டை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஒரு வருடமாக அவருடைய முன்னேற்றத்தை பார்த்து வருகிறேன். மேலும் அவருக்கே உரிய முறையில் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை வேடிக்கையாக நானும் கண்டு கொள்கிறேன். அவர் குறித்து முதலில் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பின்பு அவர் சில போட்டிகளில் வெளியில் வந்து சிறப்பாக விளையாடியது எங்களுக்கு அது போனசாக அமைந்தது. ரிஷப் பண்ட் மாதிரியான ஒரு வீரரை எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் நீங்கள் விரும்புவீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 29 பந்தில் சதம்.. எனக்கு ஐபிஎல் வித்தியாசமான உலகமாக இருக்கு – 22 வயது மெக்கர்க் பேட்டி

பூரனுக்கு நான் வீசிய அந்த பந்து மிகவும் சரியானது மற்றும் சரியான கூக்லி. நான் அவருக்கு அப்படிப்பட்ட ஒரு பந்தைத்தான் வீச நினைத்தேன். அதற்காகவே ஃபீல்ட் செட்டப் செய்தேன். மேலும் அந்தப் பந்து சரியான பகுதியில் விழுந்ததோடு, சரியாக சுழலவும் செய்தது. அப்படி ஒரு நல்ல பந்தில் நல்ல விக்கெட்டை கைப்பற்றினால் அது கொண்டாட்டத்திற்கு உத்தரவாதத்தை கொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.