வாயை மூடுங்க.. பாகிஸ்தான் ஒரு மேட்டரே கிடையாது.. இந்தியாவுல எதுவுமே பண்ண முடியாது – பொங்கி எழுந்த கவுதம் கம்பீர்!

0
467
Gambhir

தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 16ஆவது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் அதிகபட்சம் 3 போட்டிகளில் மோதுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது!

இரண்டு அணிகளும் அரசியல் காரணங்களால் தனிப்பட்ட முறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகின்றன. ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கின்றன.

- Advertisement -

இதன் காரணமாக இந்த இரு நாடுகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இந்த இருநாட்டு ரசிகர்களை தாண்டி உலக அளவில் பலத்தை எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் பொழுது ஒளிபரப்பாளர்கள் வரை மிக அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை முன் வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய பார்வையை விரிவாக பதிவு செய்து இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது. பாகிஸ்தானை மட்டும் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்காமல் உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும். இந்தியாவில் நடக்கும் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எதுவும் நடக்காது என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

இது அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதுவதை பற்றியது அல்ல. உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் விளையாடி கோப்பையை உயர்த்துவது பற்றியது. ஏனென்றால் இந்த உலகக் கோப்பையில் இருந்து அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு எத்தனை வீரர்கள் வருவார்கள் என்று தெரியாது. அவர்களுக்கு இது கடைசியான தொடராக இருக்கலாம்.

ஒரு தேசமாக, ரசிகர்களாக மற்றும் ஒளிபரப்பாளர்களாக நாம் பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் தரக்கூடாது. இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. இது உலகக் கோப்பையை வெல்வது பற்றியது. இதில் பாகிஸ்தான் ஒரு படி மட்டுமே ஆகும்.

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் நாங்கள் அந்த தொடரை ஆரம்பித்தோம். மேலும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினோம். ஒரு போதும் இது பாகிஸ்தானை பற்றியது கிடையாது. அந்தத் தொடரில் எங்களுக்கு பாகிஸ்தான் அணி ஒரு படி மட்டுமே.

எனவே கிரிக்கெட் நிபுணர்கள், ஒளிபரப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, இந்தியா உலகக் கோப்பையை எப்படி வெல்வது? என்பது குறித்து பேசுவது இந்திய அணியை நல்ல நிலையில் வைக்கும்” என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!