இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல் ; புஜாரா & ரஹானே நீக்கம் – இந்திய டெஸ்ட் அணியில் நுழையுள்ள இளம் சி.எஸ்.கே வீரர்

0
208
Gill Rahane and Pujara

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட காத்திருக்கிறது. கடந்த தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ கூறியது. ஆனால் காயம் காரணமாக ரோகித் அந்த தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் இந்த தொடரில் மிகவும் மோசமாக விளையாடி மூன்று போட்டிகளிலும் தோல்வி பெற்றது. இதனால் ராகுலின் தலைமைப் பண்பு அதிகமாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முழுநேர கேப்டனாக ரோகித் பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டார். இதன் காரணமாக ரோகித்தே போட்டிகளுக்கும் கேப்டனாக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனிடையே அவருடன் துவக்க வீரராக விளையாடுவதில் கில், மயாங்க், ராகுல் ஆகியோருக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது இந்தப் போட்டியில் அடுத்ததாக மற்றும் ஒரு இளைஞர் இணைய உள்ளார். கில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் களம் இறக்கப்பட உள்ளார். துவக்க வீரராக அவர் ரோகித் உடன் மேகி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தரப் போட்டிகளில் முப்பத்தி எட்டு சராசரி வைத்திருக்கும் ருத்ராஜ் டெஸ்ட் போட்டியில் கால்பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கூடவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே இருவரும் புறக்கணிக்கப்பட உள்ளனர். கடந்த சில தொடர்கள் ஆகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் இவர்கள். கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி பெற்றதற்கு கூட இவர்கள் தான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சித்தனர். ரஞ்சி போட்டிகளில் விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்து மறுபடியும் அணிக்குள் வர இருக்கிறார்கள்.

கூடவே வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார். இதன் காரணமாக இப்போது இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

- Advertisement -