விராட் கோலி ஜோ ரூட் தாண்டி கில் புது சாதனை.. 8 இன்னிங்ஸ்களில் 5 பெரிய சம்பவங்கள்.. சேப்பாக்கில் கலக்கல்

0
131
Gill

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து விராட் கோலி மற்றும் ஜோ ரூட் தாண்டி புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் லெக் சைடு வெளியில் விழுந்த எளிதான ஒரு பந்தை ஆடச் சென்று சுப்மன் கில் பரிதாபமாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக திடீரென அவர் மீது விமர்சனங்கள் உருவானது. இந்த நிலையில் விமர்சனங்களுக்கு மிகவும் அமைதியாக ஆனால் அட்டகாசமான சதத்தில் பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸ் ஆதிக்கம்

இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்ததின் மூலமாக, தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது முறையாக 50க்கும் மேலான ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்திருக்கிறார். பொதுவாக எப்பொழுதும் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் எடுப்பது கடினமானது. ஆனால் அந்த கடினமான வேலையை கில் எளிதாக செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் கடைசி 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மூன்று சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்து இருக்கிறார். ஐந்து பெரிய இன்னிங்ஸ்கள் கடைசி எட்டு இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்கு கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் மீது இருந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ஜோ ரூட் தாண்டி சாதனை

2022 ஆம் ஆண்டு சுப்மன் கில் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை அடித்தார். அங்கிருந்து தற்பொழுது 2024ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 12 சர்வதேச சதங்கள் அடித்திருக்கிறார். இதன் மூலமாக ஜோ ரூட் விராட் கோலி பாபர் அஸ்ஸாம் போன்ற பெரிய வீரர்களை தாண்டி, 2022 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 2 1/2 நாளில் கேப்டன் ரோகித் சர்மா டிக்ளர் செய்தது சரியா?.. 3 முக்கிய காரணங்கள்.. முழு அலசல்

2022 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் :

12- சுப்மன் கில்*
11- பாபர் அசாம்
11- ஜோ ரூட்
10- விராட் கோலி
9- டிராவிஸ் ஹெட்
9- டேரில் மிட்செல்

- Advertisement -