ஐபிஎல் 2025

சாய் சுதர்சன் வாஷிங்டன் கிட்ட சொன்ன நியூஸ் இதுதான்.. தோத்துட்டோம் ஆனா சாயை நினைச்சு பெருமைதான் – கேப்டன் கில் பேட்டி

நேற்று ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் போட்டியில் தோல்விக்கான காரணங்கள் குறித்து கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து கொண்டது. இரண்டு அணிகளிலும் வெளிநாட்டு வீரர்கள் சிலர் வெளியேறி இருக்க புதிதான சில வீரர்கள் உள்ளே வந்திருந்தார்கள்.

சாய் சுதர்சன் வாஷிங்டன் சுந்தர் போராட்டம்

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள், மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சன் 48 பந்துகளில் 81 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, ஒரு கட்டத்தில் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 68 ரன்கள் தேவை என்கின்ற இடத்திற்கு கொண்டு வந்தார்கள். இருந்தபோதும் இவர்கள் ஆட்டம் இழந்ததும் குஜராத் அணியால் 20 ஓவரில் 208 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதைத்தொடர்ந்து 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை இரண்டாவது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

சொன்ன நியூஸ் இதுதான்

இது குறித்து பேசி இருக்கும் சுப்மன் கில் கூறும் பொழுது “இது கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டம். நாங்கள் எல்லா வழிகளிலும் சரியாகவே சென்றோம். ஆனால் கடைசி மூன்று ஓவர்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இருந்தாலும் இது நல்ல போட்டிதான். நாங்கள் பந்துவீச்சில் மூன்று சுலபமான கேட்சை விட்டு விட்டோம். இதனால் எங்கள் பந்துவீச்சாளர்களால் ரன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது உங்களால் மீண்டு வருவது கடினம்”

இதையும் படிங்க : மும்பையில வீட்டு விலை மாதிரி இவரு.. ஆனா அவர் எப்படியோ என்னை குஜராத் கிட்ட காப்பாத்தி விட்டுட்டாரு – ஹர்திக் பாண்டியா பேட்டி

“சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு எங்களுடைய செய்தி மிகவும் எளிமையானது, நீங்கள் எப்படி விளையாட விரும்புகிறீர்களோ அப்படி விளையாடுங்கள் என்று சொன்னோம். பனிப்பொழிவு காரணமாக எங்களுக்கு ஆடுகளம் சாதகமாக அமைந்தது. எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் கிடைத்தது. ஆனால் கடைசி இரண்டு மூன்று போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. ஆனாலும் எங்களுடைய அனைத்து வீரர்களுக்கும் குறிப்பாக சாய் சுதர்சனுக்கும் பெருமை சேரும். அவர் இந்த சீசனில் மிகவும் அருமையாக இருந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by