நேற்று ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டும் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இடையில் பும்ரா வீசிய ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றியது.
நாங்க பதட்டத்தை காட்டல
இந்த போட்டி குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “இந்த போட்டி ஒரு கட்டத்தில் இரண்டு பக்கமுமே இருந்தது. குஜராத் விளையாடிய பொழுது பந்து நாட்டுக்கு நன்றாக வர ஆரம்பித்தது. அவர்கள் நல்ல ரிதத்திற்கு வந்தார்கள். இதனால் நாங்கள் எங்கள் பதட்டங்களை அடக்கி எங்கள் வீரர்களை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பேர்ஸ்டோ எங்கள் அணிக்காக வந்து முதல் போட்டியிலே சிறப்பாக விளையாடியிருக்கிறார்”
“இன்னொரு பக்கத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது ரோகித் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் ஆரம்பத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். பிறகு அவர் விதத்திற்கு வந்த பிறகு அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கே அழகாக இருந்தது. இளம் வீரர் அஸ்வினி குமார் சிறப்பாக பந்து வீசினார்”
மும்பை வீட்டு விலை போல இவர்
“நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் வெல்ல நினைத்தோம். அதற்கேற்றபடி நாங்கள் அனைவரும் விளையாடி நல்ல ஸ்கோரை கொண்டு வந்தோம் என்று நினைக்கிறேன். மேலும் நாங்கள் பந்து வீசும் பொழுது முன்கூட்டியே 18வது ஓவருக்கு பும்ராவை கொண்டு வருவதற்கான காரணம், இப்பொழுது கடைசி இரண்டு ஓவருக்கு ரன்களை அதிகமாக வைக்க முடியும் என்பதால்தான்”
இதையும் படிங்க : நான் எல்லாத்தையும் எப்பவோ ஒதுக்கி வெச்சிட்டேன்.. ஜெயிச்சதுக்கு காரணம் என்னோட அதிர்ஷ்டம் தான் – ரோகித் சர்மா பேட்டி
“எப்போது பும்ராவை அழைப்போம் என்று கூறினால், சந்தேகமே இல்லாமல் அணி எப்பொழுதெல்லாம் தோற்கும் நிலையில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் கூப்பிடுவோம். அவர் மும்பையில் இருக்கும் வீடுகளின் விலையைப் போல மிகவும் மதிப்பானவர். அவர் எங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆடம்பரம். இந்த போட்டியை வென்றதில் அவரது பங்கு பெரியது” என்று கூறி இருக்கிறார்.






