கோலி தோனி இல்லை.. உலகிலேயே தலை சிறந்த வீரர் இவர் தான்.. சுப்மன் கில் தைரியமான தேர்வு

0
4523

எல்லாக் காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து கில்லிடம் கேட்ட கேள்விக்கு, அவர் சற்று வித்தியாசமான பதிலைத் தந்திருக்கிறார். அதில் கோலி, ரோஹித், தோனி பெயர் கிடையாது.

வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஷுப்மான் கில், இந்திய கிரிக்கெட்டுக்குள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

இவர் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று கொடுத்ததன் மூலம், அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் மூலம் இவருக்கு ஐபில்லில் கொல்கத்தா அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர் தன்னை மிகச் சிறப்பாக நிலை நிறுத்திக்கொண்டார்.

இவர் அடிக்கும் கட் ஷாட் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒன்று. பிறகு இந்திய அணியில் விளையாடும் வாயிப்பைப் பெற்று, அதிரடியான தொடக்கத்தை அணிக்குக் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், மிகச் சிறப்பாக விளையாடி இரட்டைச்சதம் அடித்தார்.

தற்போது 24 வயதாகும் கில் இந்திய அணியின் நிலையான தொடக்க வீரராக மாறி வருகிறார். இவர் தற்போது குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் டெண்டுல்கரை எல்லாக் காலத்திலும் சிறந்த வீரர் என்று பாராட்டினார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில்,
“எல்லா காலத்திலும் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது கடினமான ஒன்று. என்னைப் பொறுத்தவரையில், சச்சினை எல்லாக் காலத்திலும் சிறந்த வீரர் என்று கூறுவேன். ஏனெனில் நான் அவரைப் பார்த்து தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்” என்று கூறினார்.

விராட் கோலி, தோனி, ரோஹித் போன்றவர்களை விட கில் டெண்டுல்கரை விரும்புவது, கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் புருவத்தை உயர்தியுள்ளது. தேசிய அணியில் கோலி, ரோஹித் உடன் இணைந்து விளையாடிய போதிலும் கில் சச்சின் மீதான அன்பு அசைக்க முடியாதபடி உள்ளது.