சுப்மன் கில் தற்காப்பு மனநிலையில் இருக்கிறார்.. ஆனால் இந்த விசயம் எனக்கு பிடிச்சி இருந்தது.. அஜய் ஜடேஜா கருத்து

0
90

ஆண்டர்சன்-தெண்டுல்கர் கோப்பை தொடரில் சுப்மன் கில்-இன் கேப்டன்சி தற்காப்பு மனநிலையுடன் இருந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, விமர்சித்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடரை 2-2 என சமநிலையில் முடித்துள்ளது.

இந்த தொடரில் முதல் டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்டில் இந்தியா வெல்ல வாய்ப்பு இருத்தும், இந்திய அணி செய்த சில தவறால் வெற்றி வாய்ப்பு கையை விட்டு சென்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜய் ஜடேஜா, “கில், கேப்டன்சியை முழு தொடரிலும் பார்த்தால், அவர் நிலையானவராக இருந்தார்.ஆனால் தற்காப்பு மனநிலையுடன் இருந்தார். முதல் போட்டியில் அவர் தேர்ந்தெடுத்த அணியே முதல் அறிகுறியை தந்தது.”

- Advertisement -

தற்காப்பு மனநிலையில் இருக்கின்றார்:

“அதன் பிறகு, அவர் திருத்தங்களைச் செய்தார். ஏதேனும் குறை இருப்பதாக உணர்ந்தபோது, அடுத்த முறை அதை மாற்றினார்.சுப்மன் கில்லின், அணுகுமுறை ஆக்ரோஷமாக இல்லை. அவர் தற்காப்பு அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இருப்பினும், ஒரு நல்ல விஷயம் தெரிந்தது. நான் அதை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அவரது உறுதித்தன்மை வெளிப்பட்டது, அது ஸ்கோர்லைனிலும் தெரிகிறது” என்று ஜடேஜா கூறினார்.

இந்தியா முழு தொடரிலும் வலுவான அணியாகத் தோன்றினாலும், போட்டி இறுதியில் சமநிலையில் முடிந்ததாக ஜடேஜா குறிப்பிட்டார். “ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் அணி தேர்வு, வெற்றியை நோக்கி முன்னேறுவதை விட தோல்வியைத் தவிர்க்கும் மனநிலையைப் பிரதிபலித்ததாக” அவர் தெரிவித்தார்.

- Advertisement -

நிலையான கேப்டன் என பாராட்டு:

காயமடைந்த கிறிஸ் வோக்ஸ், கஸ் ஆட்கின்சனுடன் இணைந்து களமிறங்கியபோது, ஒரு ஓவரின் கடைசி பந்திலும் கூட கில் ஃபீல்டர்களை உள்ளே கொண்டுவராமல் இருந்த முடிவை அவர் பாராட்டினார். இது குறித்து பேசிய அவர், “கில், தனது நிலையான தன்மையைக் காட்டியுள்ளார். அவர் தனது அமைதியைக் காட்டியுள்ளார். அவருக்கு நிறைய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டபோது, அவர் தனது உத்தியை மாற்றவில்லை.”

இதையும் படிங்க: சிராஜ், கில் அல்ல.. இந்த வீரரால் தான் இந்தியா வென்றது.. முன்னாள் வீரர்கள் பாராட்டு

அவர் ஃபீல்டர்களை பவுண்டரி லைனில் வைத்திருந்தார். இரண்டு முறை ஒரு ரன் எடுக்கப்பட்டது. இது ஒருவருக்கு மிகப்பெரிய பலமாகும். நான் அவரை ஆக்ரோஷமாக இருக்க விரும்பலாம், நீங்கள் அவரை இப்படியே காண விரும்பலாம், மூன்றாவது நபர் வேறு ஏதாவது விரும்பலாம், ஆனால் முடிவு எடுக்க வேண்டியவர் தனது சிந்தனை முறையில் உறுதியாக இருந்தால், அது மிக முக்கியமான அம்சமாகும். அந்த அம்சத்திற்கு நான் 100 சதவீதம் கில்லை பாராட்டுவேன்” என்று அஜய் ஜடேஜா தெரிவித்தார்.

- Advertisement -