இங்கிலாந்து இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத நிலையிலும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, பாராட்டினார். இந்தத் தொடரில் ராகுல் 10 இன்னிங்ஸ்களில் 532 ரன்கள் எடுத்து இந்தியாவின் இரண்டாவது முன்னணி ரன் குவிப்பாளராகவும், மொத்தத்தில் மூன்றாவது இடத்திலும் திகழ்ந்தார்.
ராகுல் தொடக்க ஆட்டக்காரராக பங்களித்தது மட்டுமின்றி, அந்த பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்தார் என்பதை நெஹ்ரா பாராட்டினார்.இது குறித்து பேசிய அவர், “ராகுல் ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மேன். விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இல்லை. சில இளம் வீரர்கள் இருந்தனர். இங்கிலாந்து சுற்றுப்பயணம் எளிதானது அல்ல.”
ராகுல் சிறப்பான செயல்பாடு:
“முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மைதானங்கள் மிகவும் எளிமையாக இருந்தாலும், அங்கு ரன்கள் எடுக்க வேண்டும். ராகுல் அதைச் செய்து காட்டினார். தொடக்க ஆட்டக்காரராக, அணியில் மிகவும் அனுபவமிக்க வீரராக இருக்கும்போது, அது மனதில் இருக்க வேண்டும். அவரைப் போன்ற அனுபவமிக்க வீரர்களும், ஜஸ்பிரீத் பும்ராவும் தங்கள் பணியை முழுமையாகச் செய்தனர்.”
“அவர் நீண்ட காலமாக விளையாடி வந்த இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தது நல்லதாக இருந்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்” என்று அ கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஆர்.பி. சிங், “கே.எல். ராகுல் தொடருக்கு முன்பு எந்த ஷாட்களைத் தவிர்க்க வேண்டும் என்று உறுதியான முடிவு எடுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.”
ராகுல் அனுபவத்தை பகிர்ந்தார்:
“பேட் எப்போதும் அவரது உடலுக்கு அருகில் இருந்தது. புல் லெங்த் பந்துகளை மட்டுமே அவர் டிரைவ் செய்தார். நீளமான பந்துகளில் ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். அவர் தனது அனுபவத்தை கேப்டனுடன் பகிர்ந்து கொண்டார். பேட்டிங் செய்யும்போது, சில சமயங்களில் உங்கள் பார்ட்னருக்கு பந்து எவ்வளவு ஸ்விங் ஆகிறது அல்லது போட்டியின்போது என்ன திருத்த வேண்டும் என்று சொல்ல வேண்டும். அவர் சில வீரர்களுடன் இதைச் செய்தார்.”
இதையும் படிங்க: என்னுடைய டீம் இப்படித்தான் இருக்கும்.. முக்கியமா நீங்க விரும்பியது கிடைக்காது – கம்பீர் பேட்டி
“ஆனால் ரிஷப் பந்துடன் இதைச் செய்யவில்லை. இருப்பினும், மற்ற பேட்ஸ்மேன்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்” என்று ஆர்பிசிங் கூறினார்.இந்தியா, ஓவல் மைதானத்தில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆண்டர்சன்-தெண்டுல்கர் கோப்பையை 2க்கு2 என்ற கணக்கில் சமன் செய்தது.






