ரோகித் பாய் எனக்கு கொடுத்த பொறுப்பு.. களத்துக்கு உள்ள வெளியே இத செய்றேன் – துணை கேப்டன் கில் பேட்டி

0
59
Gill

இந்திய அணியின் துணை கேப்டன் ஆன தனக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எப்படியான பொறுப்பை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொடுத்திருக்கிறார் என்பது குறித்து சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

தற்போது சுப்மன் கில் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். கடைசி நான்கு ஒரு நாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அளித்திருக்கிறார். இதில் மூன்று ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். மேலும் சாம்பியன்ஸ் டிராபியின் இந்திய அணியின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்தார்.

- Advertisement -

விமர்சனங்களை நொறுக்கிய கில்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கில் இடம்பெறக்கூடாது என பல இந்திய ரசிகர்கள் வெளிப்படையாக பேசினார்கள். இப்படியான நிலையில் அவரை அணியில் சேர்த்ததோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள்.

அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கில் மிகச் சிறப்பான வீரர் என்பதை அடுத்த நான்கு போட்டிகளில் நிரூபித்து இருக்கிறார். இதன் காரணமாக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர் உடைத்திருக்கிறார். மேலும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் களத்தில் துணை கேப்டனாக தான் எவ்வாறு செயல்பட்டு வருகிறேன் என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா கொடுத்த பொறுப்பு

இதுகுறித்து சுப்மன் கில் கூறும்பொழுது ” நான் களத்தில் இருக்கும் போதும் வெளியில் இருக்கும் பொழுதும் தொடர்ந்து பந்துவீச்சாளர்களுடன் பேசி வருகிறேன். இங்கிருக்கும் வெப்பத்தில் அவர்கள் செயல்படுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. மேலும் களத்தில் மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைகளில் பீல்டிங் நிற்கும்பொழுது பந்துவீச்சாளர்களுடன் பேச விரும்புகிறேன். பந்துவீச்சு திட்டங்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்யும் பொறுப்பை கேப்டன் ரோகித் சர்மா என்னிடம் கொடுத்திருக்கிறார். நானும் பந்துவீச்சாளர்களுடன் தொடர்ந்து பேசுகிறேன்”

இதையும் படிங்க : இந்திய அணியின் அந்தத் திட்டம் எங்களிடம் பலிக்காது.. 90கள் திரும்பி வரப்போகுது – பாக் கோச் பேட்டி

“நான் பேட்டிங் செய்யும்பொழுது என்னை ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது பெரிய போட்டி. ஆனால் அதைவிட இறுதிப்போட்டி பெரிய போட்டி. நாங்கள் தற்பொழுது சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம். மேலும் பாகிஸ்தான் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட மாட்டோம். நாங்கள் ஸ்விட்ச் ஆன் செய்து எங்களுடைய ஏ கேமை நாளை கொண்டு வருவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -