ஸ்ரேயாஸ் திலக் வர்மா சாம்சன் யாரும் வேண்டாம்.. No4 க்கு இவரைக் கொண்டாங்க – ஆச்சரியத்தை கிளப்பும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

0
9013
Tilak

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தயாரிப்பை எடுத்துக் கொண்டால், தேவைப்படுகின்ற வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள், ஆனால் அதில் குறிப்பிட்ட வீரர்கள் காயத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சிக்கலை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துவங்க இருக்கின்ற ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை இதுவரையில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தால் தேர்வு செய்ய முடியாமலே இருந்து வருகிறது.

- Advertisement -

காரணம், தற்பொழுது அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள, காயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கும் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் போட்டிக்கான உடல் தகுதியோடு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதன் காரணமாக இன்று நடைபெறும் முதல் போட்டியை பார்த்துவிட்டு 20ஆம் தேதி ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் காத்திருக்கிறது.

இன்னொரு பக்கத்தை எடுத்துக் கொண்டால் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி எப்படி இருக்கிறது? இவ்வளவு நாட்கள் விளையாடாத ஒரு வீரரை உடனே அனுப்பி கொண்டு வந்து முக்கிய தொடரில் விளையாட வைக்க முடியுமா? என்ற குழப்பம் நிலவுகிறது. இதே குழப்பம் தான் அப்படியே கே.எல்.ராகுல் மீதும் இருக்கிறது.

இவர்கள் இருவரது உடல் தகுதியும் சந்தேகத்தில் இருப்பதால், இந்திய தேர்வுக் குழுவுக்கு ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை இரண்டு தொடர்களுக்கும் இந்திய அணியை தேர்வு செய்து அறிவிப்பதில் தாமதத்தை உண்டாக்கி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய பேட்டிங் வரிசையில் நடுப்பகுதியில் முக்கியமாக நம்பர் நான்காம் இடத்தில் யாரை விளையாட வைப்பது என்று பெரிய ரேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அணிக்கு வெளியே ஸ்ரேயாஸ் இருக்கிறார், அணிக்கு உள்ளே இந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வருமா ஆகியோர் இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கிடைக்காவிட்டால் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்திற்கு எந்த வீரர் சரியாக இருப்பார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது, அதற்கு பதில் அளித்த இந்திய தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் சபா கரீம் ” உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் சூரியகுமாருக்கு அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். என்னைக் கேட்டால் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு நான் சூரியகுமாரை கொண்டு வரச் சொல்வேன்.

கே.எல்.ராகுல் சரியான நேரத்தில் உடல் தகுதி பெறவில்லை என்றால், அந்த நேரத்தில் நினைவுக்கு வரும் முதல் பெயர் இஷான் கிஷான்தான். ஏனென்றால் அவரால் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவும், மிடில் வரிசையிலும் வந்து விளையாடக் கூடிய வீரராகவும் இருக்க முடியும். மேலும் இடது கை வீரர். எனவே எனது தேர்வு அவர்தான்!” என்று கூறியிருக்கிறார்!