இந்திய கிரிக்கெட்

என் பையன கேப்டன் ஆக்க வேண்டாம் டீம்லயாவது சேருங்க.. நாங்க இன்னும் என்ன பண்ணனும் – ஸ்ரேயாஸ் ஐயர் தந்தை வருத்தம்

தன்னுடைய மகனுக்கு ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் இடம் தராதது பெரிய ஏமாற்றமாக இருப்பதாகவும், சிறப்பாக செயல்பட்டும் இடம் கிடைக்காததால் இன்னும் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை எனவும் ஸ்ரேயாஸ் ஐயர் தந்தை வேதனை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று முன்தினம் ஆசியக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணியில் ஆச்சரியப்படும் விதமாக சுப்மன் கில் பெயர் இடம் பெற்றதோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர்கள் இல்லாதது அதிர்ச்சியடைய வைத்தது.

எல்லாமே செய்தான்

ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டில் எல்லா வடிவத்திலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு 175க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 600 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார். இதன் காரணமாக நிச்சயம் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

இதுகுறித்து அவரது தந்தை பேசும் பொழுது ” இந்திய டி20 அணியில் இடம் பிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியவில்லை. டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் கேப்டனாகவும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்”

- Advertisement -

கேப்டன் ஆக்க வேண்டாம்

“நீங்கள் ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக எடுத்துக் கொண்டால் அவர் யாரும் செய்யாத விஷயங்களை செய்திருக்கிறார். ஆனால் நாங்கள் அவரை இந்திய டி20 அணிக்கு கேப்டன் ஆக்குங்கள் என்று கேட்கவில்லை. அவருக்கு இந்திய டி20 அணியில் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்”

இதையும் படிங்க : சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது சிறப்பான விசயம்.. ஆனால், இவங்க 2 பேர் என்ன பாவம் பண்ணாங்க.. பத்ரிநாத் கேள்வி

“இப்படி இருந்தாலும் கூட இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும் கூட அவர் முகத்தில் எதிர்ப்பை காட்ட மாட்டார் என்று நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். இப்போது கேட்டால் கூட இது என்னுடைய அதிர்ஷ்டம் இதற்கு மேல் உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றுதான் சொல்லுவார். அவர் எப்பொழுதும் நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பார். ஆனாலும் கூட தற்போது மனதுக்குள் ஏமாற்றம் அடைந்து இருப்பார் என்பது உண்மை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shreas Iyer