இந்திய கிரிக்கெட்

வெறும் 13 ஓவர்.. ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் ஷர்மா.. ஆப்கானை சாதாரணமாக வீழ்த்தியது இந்திய அணி

​டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

​இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸ்மதுல்லா ஓமர்சாய் 44 பந்துகளில் 64 ரன்களும், அவருக்கு அடுத்தபடியாக முகம்மது நபி 27 பந்துகளில் 33 ரன்களும் குவித்தனர்.

​இந்திய பந்துவீச்சு தரப்பில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

​157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றியை அடைந்தது. இந்திய தரப்பில் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 82 ரன்களும், இசான் கிசான் 33 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து வெற்றிக்கு பாதை அமைத்தனர்.

- Advertisement -

​இப்போட்டியின் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் பேசும்போது “அர்ஷ்தீப் சிங் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி பிரஷர் கொடுத்தார், சேஸிங்கில் அபிஷேக் சர்மா காட்டிய அதிரடி ஆட்டம் வெற்றியை எளிதாக்கியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by