2025 ஆசிய கோப்பை அணியில் ஷுப்மன் கில்லை துணை கேப்டனாக பிசிசிஐ தேர்வுக்குழுவின் முடிவை முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுப்ரமணியம் பத்ரிநாத், வரவேற்றார். ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்காக இந்தியா 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. ஷுப்மன் கில் ஜூலை 2024க்குப் பிறகு முதல் முறையாக டி20 அணியில் மீண்டும் இடம்பெற்று, அக்ஸர் படேலை பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சுப்மன் கில்- நல்ல முடிவு:
ஆனால், ஜெய்ஸ்வால் மற்றும் சுதர்சன் ஆகியோர் ஐபிஎல் 2025ல் ஷுப்மனை விட சிறப்பாக விளையாடியதாகவும், ஆசியக் கோப்பை அணியில் இடம்பெற தகுதியானவர்கள் என்றும் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறினார். இது குறித்து பேசிய அவர், “ஒரு இளம் வீரரை ஆதரித்து எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது பெரும்பாலும் நல்ல முடிவு.”
“ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி என்ன? அவர் ஷுப்மன் கில்லை விட சிறப்பாக செயல்பட்டார். மேலும், சாய் சுதர்சன் ஐபிஎல் 2025ல் 700 ரன்கள் எடுத்து ஷுப்மனை விட சிறப்பாக விளையாடியும் ஏன் தவிர்க்கப்பட்டார்? சஞ்சு சாம்சனே இப்போது முதல் லெவனில் தொடங்குவது கேள்விக்குறியாக உள்ளது”
“சுப்மன் கில்லை ஆதரிக்கும் அதே வேளையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் என்ன தவறு செய்தார்கள் என்று கேட்கிறோம், அவர்களின் புள்ளிவிவரங்கள் ஷுப்மனை விட சிறப்பாக உள்ளன. இந்த தேர்வு சமீபத்திய செயல்பாட்டு சார்பு அடிப்படையிலா? இந்திய கிரிக்கெட்டில் இது நீண்ட காலமாக நடந்து வருகிறது.”
மோசமான முடிவு இல்லை:
“வெவ்வேறு ஃபார்மெட்டாக இருந்தாலும், அந்த நேரத்தில் சிறப்பாக விளையாடுபவரை தேர்ந்தெடுப்பது. இது மோசமான முடிவு இல்லை. ஆனால் 50-50 முடிவு,” என்று தெரிவித்தார். ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிராக சீரான செயல்பாட்டால் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தொடரில் அதிக ரன்கள் குவித்தவராகவும், அணியை சிறப்பாக வழிநடத்தியவராகவும் திகழ்ந்தார்.
இதையும் படிங்க: 34 பந்துக்கு வெறும் 1 சிக்ஸர்.. கில்லுக்கு எங்க சாய் சுதர்ஷன் என்ன குறைச்சல்.. மோசமான செலக்சன் – சடகோபன் ரமேஷ் விமர்சனம்
“ஷுப்மன் கில் கடந்த 2-3 ஆண்டுகளாக டி20 அணியில் தொடர்ந்து இடம்பெறவில்லை. ஆனாலும், இந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் அவரது சிறப்பான கேப்டன்ஷி மற்றும் செயல்பாடு இதற்கு தெளிவான காரணம். அது டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும். எனவே, அவர் நிச்சயமாக அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார்” என்று பத்ரிநாத் கூறினார்.






