உலககோப்பையில் இருந்து முன்னணி வீரர் விலகும் நிலைமை – வெளிவந்த ஷாக் ரிப்போர்ட்!

0
1551

முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் வருகிற உலக கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளின் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகளுக்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

- Advertisement -

கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடத்தப்பட்டது. அப்போது இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறையும் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆகையால் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதற்கிடையில் இந்திய முன்னணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக வெளியில் இருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கிறது. பும்ரா கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். கேஎல் ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிஷப் பண்ட் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இப்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். கடந்த கிரிக்கெட் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த பிப்ரவரி மாதம் காயம் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் அய்யர் குணமடைவதில் தாமதம் ஆகிறது. ஆகையால் அவர் உரிய நேரத்தில் குணமடைந்து மீண்டும் பயிற்சிகளுக்கு திரும்புவார். உலகக்கோப்பைக்குள் மீண்டும் அணிக்கு வந்து விடுவார் என்கிற நம்பிக்கை இல்லை. பொறுத்திருந்துதான் காண வேண்டும் என இந்திய தேசிய அகடமி அதிகாரி ஒருவர் அப்டேட் கொடுத்தது சற்று பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

கேஎல் ராகுல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆசியகோப்பைக்குள் திரும்பி விடுவார் என்கிற தகவல்களையும் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் ரிஷப் பண்ட் கால்பகுதியில் குணமடைந்து வருவது வழக்கத்தை விட சற்று மெதுவாகவே இருப்பதால் அவர் உலகக்கோப்பைக்குள் வருவாரா என்கிற சந்தேகம் தற்போது வரை நிலவி வருகிறது. மேலும் பும்ரா விரைவில் பயிற்சி போட்டிகளில் ஈடுபடவுள்ளார். அவரும் விரைவில் இந்திய அணிக்கு திரும்புகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.