தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மெகா இடத்தில் வாங்கப்பட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் எப்படிப்பட்ட கேப்டன்? என்பது குறித்து பேட்டியளித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. ஆனால் மென்டராக இருந்த கம்பீருக்கு நிறைய புகழ் சென்றது. பல ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி குறித்து பெரிதாக வெளியில் பேசவில்லை. இந்த நிலையில் தான் எப்படிப்பட்ட கேப்டன்? என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் வித்தியாசமான முடிவு
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பல அணிகளும் ரிஷப் பண்டுக்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி அவருக்காக எந்த விலையையும் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட்க்கு ஏலத்தில் செல்லாமல் ஆச்சரியம் கொடுத்தார்.
மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் 26 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் வாங்கினார். மேலும் எதிர்பார்க்கப்பட்ட படியே ஸ்ரேயாஸ் ஐயரை நேற்று ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்து கேப்டனாக பஞ்சாப் கிங்ஸ் அறிவித்தது. இந்த நிலையில் தன்னுடைய கேப்டன்சி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
நான் இப்படிப்பட்ட கேப்டன்தான்
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது ” உங்களுக்கு மிக அதிகபட்ச சுதந்திரம் இருக்கும் பொழுது, வீரர்கள் ஒரு கேப்டன் தங்களை ஆதரிக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்கள். எந்த சூழ்நிலை இருந்தாலும் வீரர்களை ஆதரிக்க கூடிய கேப்டனாக இருக்கிறேன். எனது உள்ளுணர்வின்படி நான் முடிவுகள் எடுக்கிறேன். சில சமயங்களில் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை நான் செய்கிறேன். அது களத்தில் எனக்கு வேலை செய்கிறது. ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் அது எனக்கு வேலை செய்ததாக நினைக்கிறேன்”
இதையும் படிங்க :என் தலைமையில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்.. இதை நாங்கள் செய்வோம் – பிசிசிஐ புதிய செயலாளர் பேட்டி
“கேகேஆர் டக் அவுட்டில் இருந்த ஒருவர் அந்த சமயத்தில் என்னிடம் ஏன் ரசலுக்கு ஓவர் கொடுத்தீர்கள்? என்று கேட்டார். ஏனென்றால் ரசல் வீசிய முதல் அல்லது இரண்டாவது ஓவர் ரன்களுக்கு சென்று இருந்தார் என்று நினைக்கிறேன். மேலும் மற்ற பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் நல்ல முறையில் இருந்தார்கள். ஆனால் நான் ரசல் ஏதாவது மாற்றத்தை திருப்புமுனையை தரக்கூடியவர் என்று நம்பினேன். நான் அவரிடம் ஓவர் கொடுக்க அவரும் அதையே செய்தார். எனவே நான் என் மனதில் தோன்றும் முதல் எண்ணத்தின்படி செயல்பட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.