இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேவஜித் சைக்கியா இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்தப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததின் காரணமாக அங்கிருந்து ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
திடீரென சரிந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட்
இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 12 ஆண்டுகளுக்கு அளித்து வலிமை குறைவான நியூசிலாந்து அணியிடம் தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. குறிப்பாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதல் முறையாக ஒரு போட்டியை கூட வெல்லாமல் ஒயிட் வாஸ் ஆகி அதிர்ச்சி கொடுத்தது.
இதைத்தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியிடம் இழந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் விதத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அணுகுமுறை மிகவும் மோசமாக மாறியது. குறிப்பிட்ட எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணி மோசமான நிலையில் இருப்பது போல தோற்றம் உருவானது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.
தேவையானதை செய்யப் போகிறோம்
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் பாடிய புதிய செயலாளர் தேவஜித் சைக்கியா கூறும்பொழுது “தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் விஷயங்கள் மிகவும் சவாலாக மாறியிருக்கிறது. நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் செயல்படவில்லை. இதற்கடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் வெள்ளைப் பந்து தொடர்களையும் அடுத்து துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாட இருக்கிறோம்”
இதையும் படிங்க : அம்பதி ராயுடுக்கு விராட் கோலி அநீதி செய்தார்.. இது கொஞ்சமும் நியாயம் இல்லை – ராபின் உத்தப்பா பேட்டி
“ஒரு நேரத்தில் ஒரு தொடரை பற்றி மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். நாங்கள் இது சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களாக நிறைய ஆலோசனைகள் செய்திருக்கிறோம். நாங்கள் இந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் சரி செய்ய நினைக்கிறோம். அதற்கு தேவையான எல்லா மாற்றங்களையும் செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.