கடைசி 3 டெஸ்ட்.. நட்சத்திர வீரர் காயத்தால் விலக வாய்ப்பு?.. இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு

0
281
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

ஆச்சரியப்படுத்தும் விதமாக இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வென்றது. இரண்டாவது போட்டியில் திரும்ப வந்த இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வென்று தொடரை சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய தேர்வுக் குழு இந்திய அணியை அறிவித்திருந்தது. இரண்டு டெஸ்டுகளில் இந்திய வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து மேற்கொண்டு தேர்வு செய்ய இந்திய நிர்வாகம் முடிவு செய்து இருந்தது..

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயத்தின் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் வெளியேறியிருந்தார்கள். இந்திய அணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்ட போதிலும், ஜெய்ஸ்வால் மற்றும் பும்ரா இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தார்கள்.

மேலும் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இல்லாதது ஏன் என்பது குறித்து நிறைய யூகங்கள் வெளியே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான விஷயங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

- Advertisement -

மேலும் விராட் கோலி அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு கிடைப்பாரா? என்பதும் தற்பொழுது பெரிய சந்தேகத்தில் இருக்கிறது. இப்படியான காரணங்களால் இந்திய தேர்வுக்குழு இந்திய அணித்தேர்வை தள்ளி வைத்திருக்கிறது போல தெரிகிறது.

தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாட முடியாமல் போகலாம் என்கின்ற செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

கேஎல்.ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கு திரும்பாவிட்டால், ஸ்ரேயாஸ் ஐயர் காயம் இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று கூறலாம். இந்திய சூழ்நிலையைப் பொறுத்தவரையில் அவர் நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். மேலும் அவருக்கு இரண்டு இன்னிங்ஸ்களில் நல்ல துவக்கம் கிடைத்ததை தவறாக விளையாடிக் எடுத்துக் கொண்டார்.

இதையும் படிங்க : “மறுபடியுமா? வாங்க வாங்க.. பைனல்ல இந்திய அணி கூட மோதத்தான் வெயிட் பண்றோம்” – ஆஸி கேப்டன் சவால்

இரண்டு பெரிய வீரர்கள் இல்லாத பொழுது இவர் விளையாடுவது இந்திய அணிக்கு முக்கியமாகத்தான் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இவர் காயத்தால் விளையாட முடியாமல் போகலாம் என்கின்ற செய்திகள் இந்திய அணிக்கு உண்மையில் பின்னடைவாகவே அமைகின்றது!