இந்திய அணியில் தனக்கு நடக்கும் புறக்கணிப்புகள் மற்றும் மக்கள் தன் குறித்து பேசுவது பற்றி தான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நாளை மறுநாள் தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கட்டாயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் ஏமாற்றும் அளிக்கும் வகையில் அவர் சிறந்த பார்மில் இருந்த பொழுதும் கூட இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு மோசமான காலகட்டங்கள் இருந்த பொழுது அவர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெற்று விளையாடினார்கள். அதே சமயத்தில் இந்தியாவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட் கலந்துகொண்டு விளையாடவில்லை என்று கூறி அவரை சம்பள பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது. மேலும் அதிர்ஷ்டவசமாக மட்டுமே தற்பொழுது ஒருநாள் அணியில் இடம் பெறுகிறார். மேலும் இந்திய டி20 அணிக்கு சிறந்த ஃபார்மில் ஐபிஎல் தொடரில் இருந்த போதும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “மக்கள் என்னை குறித்து என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஒருமுறை நீங்கள் இந்த மனநிலைக்கு வந்து விட்டால் பிறகு நீங்கள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள். ஒரு தனி நபராக நாம் எப்பொழுதும் சரியானவர்கள் கிடையாது. எனவே நான் தொடர்ந்து தவறை சரி செய்து கொள்ள உழைத்துக் கொண்டே இருக்கிறேன். நான் தினமும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ஆவலுடன் இருக்கிறேன்”
இதையும் படிங்க : துலீப் கோப்பை 2025.. இறுதி போட்டிக்கு முன்னேறியது யார்? பரபரப்பாக முடிந்த இறுதிநாள் ஆட்டம்
“என் வாழ்க்கையில் பல கட்டங்கள் இருந்தது. என்னை வெளிப்படையாகவே நிராகரித்தார்கள். மேலும் தனிப்பட்ட முறையில் தோல்விகளும் வந்தது. நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல இருந்தது. எனவே இவை அனைத்தும் மூலமாக நான் கற்றுக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.