துலீப் கோப்பை தொடரின் இறுதிச்சுற்றுக்கு சவுத் சோன் அணியும், சென்ட்ரல் சோன் அணியும் தகுதி பெற்றுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நார்த் சோன் அணியுடன் சௌத் சோன் அணி பலப்பரிட்சை நடத்தியது. இதில் சவுத் சோன் அணியில் நாராயண் ஜெகதீசன், படிக்கல் உள்ளிட்ட வீரர்கள் களமிறங்கி இருந்தனர்.நார்த் சோன் அணியில் யாஸ் துல் ஆயுஸ் பதோணி ,அன்சூல் காம்போஜ், நிசாந்த் சித்து உள்ளிட்ட வீரர்கள் விளையாடினர்.
இந்த நிலையில் சௌத் சோன் அணி முதல் இன்னிங்சில் நாராயண் ஜெகதீசனின் அதிரடி ஆட்டத்தால் 536 ரன்கள் குவித்தது. நார்த் சோன் அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸிசில் அபாரமாக விளையாடியது. மூன்றாவது நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் கடைசி நாளான இன்று சவுத் சோன் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 538 ரன்களை தாண்ட வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கினர்.
சவுத் சோன் அணி அபாரம்:
ஆனால் சவுத் சோன் அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் காயம் காரணமாக வெளியேறிய குர்ஜப்னீத் சிங் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 361 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் அந்த அணி விளையாடியது.
முதல் இன்னிங்சில் 197 ரன்கள் குவித்த நாராயண ஜெகதீசன் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடிக்க, 2வது இன்னிங்சில் 95 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்த நிலையில் போட்டி சமனின் முடிவடைந்தது. இதை அடுத்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அடிப்படையில் சௌத் சோன் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பைனலில் சென்ட்ரல் சோன்:
அதேபோன்று சர்துல் தாக்கூர் தலைமையிலான் வெஸ்ட் சோன் அணியும் ரஜத் பட்டிதார் தலைமையிலான சென்ட்ரல் சோன் அணியும் மோதியது. இதில் வெஸ்ட் சோன் அணியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் 184 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. எனினும் செண்ட்ரல் சோன் அணியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் பலரும் நல்ல தொடக்கங்களை பெற்று வெளியேறினர். குறிப்பாக ஐந்து வீரர்கள் அரை சதம் அடித்து இருந்தனர்.
இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தம்.. காரணம் அரசியல் கிடையாது.. முட்டாள்தனம் தான்!
இதன் காரணமாக அந்த அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இது சென்ட்ரல் சோன் அணியின் முதல் இன்னிங்ஸ் விட அதிகம் ஆகும். இதனை அடுத்து செண்ட்ரல் சோன் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய ருதுராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் சென்ட்ரல் சோன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.






