“ஸ்ரேயாஸ் சொல்ற மாதிரி டெஸ்ட் விளையாட முடியாது.. இத அவரே உணர்வார்” – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

0
130
Shreyas

இந்தியாவில் ஜனவரி 25ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து ஒரு மாதங்களுக்கு முன்பாகவே அணியை அறிவித்து, தற்போது அபுதாபியில் பயிற்சியில் இருந்து தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்திய அணி உள்நாட்டில் நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முடித்துக் கொண்டு, இருபதாம் தேதி முதல் டெஸ்ட் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கில், ஸ்ரேயாஷ், மற்றும் கே எல் ராகுல் மூவரும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த மூவரில் இருவருக்கு மட்டுமே பேட்டிங் யூனிட்டில் இடம் கிடைக்கும். கேஎல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடாத காரணத்தினால் இந்த சூழ்நிலை அமைந்திருக்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் சில தினங்களுக்கு முன்பாக தான் சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் எப்பொழுதும் தாக்குதல் முறையில் விளையாட விரும்புவதாக பேசி இருந்தார். ஆனால் விளையாட இருக்கும் டெஸ்ட் தொடருக்கு இது சரி வருமா? என்கின்ற கேள்வி இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” ஸ்ரேயாசை களத்தில் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நேர்மறை எண்ணத்துடன் அணுகுவதற்கு தயாராகிவிட்டார். சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் எப்பொழுதும் பாசிட்டிவாக விளையாட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

டெஸ்ட் கிரிக்கெட்டை உங்களால் அப்படி விளையாட முடியாது. இருப்பினும் அவர் தொடர்ந்து அதிக அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பில் இருப்பதால், அவர் இதை தானே புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நாள் முழுவதும் நேர்மறையாக பேட்டிங் செய்வது சாத்தியம் கிடையாது. மனரீதியாக பாசிட்டிவாக இருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ள வேண்டும். இதை ஸ்ரேயாஸ் கற்றுக் கொள்வார் என்று கூறியிருக்கிறார்.