இந்தியா பாகிஸ்தான் ஆஸ்திரேலியா & இங்கிலாந்து அணிகளை வைத்து டி20 சூப்பர் சீரியஸ் நடத்துவது குறித்து ஜெய் ஷாவின் கருத்து

0
776
Ramiz Raja and Jay Shah about T20 Super Series

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்று வந்து விட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும். ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அரசியல் ரீதியான பிரச்சனை இரு நாட்டுக்கும் இடையே உள்ளதால் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான எந்தவித தொடர் போட்டியும் நடைபெறுவதில்லை. இந்த இரு அணிகளும் ஐசிசி நடத்தும் சர்வதேச உலக கோப்பை போட்டியில் மட்டுமே மோதி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் தலைவர் ரமீஷ் ராஜா இந்தியா பாகிஸ்தான் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கொண்டு ஒரு டி20 சூப்பர் சீரியஸ் நடத்த முயற்சிகள் எடுத்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

இந்தியா ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை கொண்டு டி20 சூப்பர் சீரிஸ்யஸ் நடத்துவது குறித்த செய்தி பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷாவிடம் முன்னெடுத்து வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர் இது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதுபோல் பதிலளித்துள்ளார்.

நிச்சயமாக இந்த தொடர் நடைபெற்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எழும் அதுமட்டுமின்றி இந்த தொடர் மூலமாக நிறைய வருவாயும் கிடைக்கும். ஆனால் இனிவரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் போட்டிகள் அதிகமாக போகின்றன. அதுமட்டுமின்றி ஐசிசி தரப்பிலான உலக கோப்பை தொடர் போட்டிகள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைய இருக்கின்றன. மறுபக்கம் இருதரப்பு தொடர் போட்டிகளும் ஒவ்வொரு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற வேண்டி இருக்கிறது.

மேற்கூறிய அனைத்துப் போட்டிகளுக்கும் கால அட்டவணை சரியாக இருக்கப்போகின்றது எனவே டி20 சூப்பர் சீரியஸ் நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. மறுபக்கம் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியை இணைப்பது குறித்த முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் போட்டியை உலக அளவில் வளர செய்ய வேண்டும். அது சம்பந்தமான முயற்சி அதிக அளவில் எடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இறுதியாக கூறி முடித்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல்

கடந்த ஆண்டு நடந்த முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் மோதின. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மீண்டும் இந்த இரு அணிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் மோத இருக்கின்றன. அக்டோபர் 23ஆம் தேதி அன்று இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது..