அதிர்ச்சி; ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டார்; காயத்தால் வெளியேறுகிறார்!

0
308
Bumrah

இந்த ஆண்டில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது. இதில் ஒரு பின்னடைவாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேறுகிறார்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றார்.

- Advertisement -

மேலும் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக 2 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியிலும் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றிருந்தார்.

ஆனால் தற்பொழுது அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறுகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இங்கிலாந்து சென்று இருந்தது. அந்த மூன்று தொடர்களிலும் பங்கேற்ற ஜஸ்பிரித் பும்ரா முதுகு பகுதியில் காயம் அடைந்தார். இதனால் அவர் ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

மேலும் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற அவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் பெங்களூரில் இருந்து வந்தார். அங்கு சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொண்டு பரிசோதனையின் முடிவில் அவர் தயாராகி விட்டார் என்று தெரிந்த பின்பே ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இடம் பெற்றார். ஆனால் தற்பொழுது மீண்டும் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேற வேண்டிய மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிச்சயம் அவர் அணியில் இல்லாதது இந்திய அணியை டி20 உலக கோப்பையில் பாதிக்கும்!